Wednesday 30 March 2011

எள்ளு உருண்டை


எள்ளு உருண்டை

sesame-seeds
எள்ளு உருண்டை சத்தாண உணவு பொருள், அந்தக்கால குழந்தைகளின் ஆரோக்கியத்திர்க்கு தாய்மார்கள் கொடுக்கும் நொருக்குத்தினியில் எள்ளு உருண்டைக்கு முதல் இடம் என்று என் அப்பத்தா கூறினார்கள். உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • வெள்ளை எள் – 4 கப்
  • சர்க்கரை     - 3 கப்
  • ஏலக்காய்   -  6
  • நெய்              - தேவைக்கு
செய்முறை – ஒன்று
el-urundai-1
  • வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  • வறுத்த எள்ளு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். (நைசாக அரைக்காமல் சிறிது மொற மொறப்பாக அரைக்கவும் ) .
  • அரைத்த மாவை  சிறு  சிறு  உருண்டைகளாக  உருட்டி முழு  எள்ளிள் ( பார்ப்பதர்க்கு அழகாக இருக்கும் ) ஒரு பிரட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
 மிகவும் சுவையான, சத்தாண எள்ளு உருண்டை தயார்.
 செய்முறை  இரண்டு
el-urundai-23
  • வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  •  
  • அடுத்து ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு இடைவிடாது வறுத்து பாகு காய்ச்ச வேண்டும்.
  •  
  • பின்பு சர்க்கரையை பாகில் வறுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
  •  
  • சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கிநமக்கு பிடித்த வடிவில் உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.
 மிகவும் சுவையான, சத்தாண எள்ளு உருண்டை தயார்.

No comments:

Post a Comment