Wednesday 30 March 2011

உருளைக்கிழங்கு வறுவல்


உருளைக்கிழங்கு வறுவல்


 potato-fry1 

தேவையான பொருள்கள்:
  • சின்ன உருளைக் கிழங்கு – கிலோ
  • வெங்காயம்  100 கிராம்
  • தாளிக்க   - 4
  • மஞ்சள் தூள்  1/2  ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
  • மல்லித்தூள்  -  3 ஸ்பூன்
  • இஞ்சி,பூண்டு விழுது  1 ஸ்பூன்
  • எண்ணெய்  – தேவைக்கு
  • கடுகு,உளுத்தம் பருப்பு – தாளிக்க
  • கடலைப் பருப்பு – தாளிக்க
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை  - சிறிது

செய்முறை:


உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகுஉளுத்தம் பருப்புகடலைப் பருப்புகறிவேப்பிலைபோட்டு தாளித்ததும் அதில் இஞ்சி,பூண்டு விழுது, வெங்காயம் இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி பின் உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும்.

அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், உப்பு என எல்லாவற்றையும்  சேர்த்து நன்கு கிளறவும்.

இடைவிடாது கிளறிக் கொண்டே இருக்கவும். பொன்னிறமாக இருக்க வேண்டும் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

சுவையான உருளைக்கிழங்கு வறுவல்

No comments:

Post a Comment