Wednesday 30 March 2011

தக்காளி ரசம்


தக்காளி ரசம்

rasam

தேவையான பொருட்கள்

மிளகு       -   1 ஸ்பூன்
சீரகம்       -   2 ஸ்பூன்
வரமிளகாய்  -  4
புளி          - சிறிது
தக்காளி      -  4
பூண்டு       - 10 பல்
மஞ்சள் தூள்   -  1/4 ஸ்பூன்
எண்ணெய்   -  1 ஸ்பூன்
உப்பு        -  தேவைக்கு
கறிவேப்பிலை  சிறிது
கொத்தமல்லி  - சிறிது
   iiiiiiii ii
செய்முறை
மிக்சியில் மிளகு, சீரகம், வரமிளகாய்-3, புளி, பூண்டு, தக்காளி என அனைத்தையும் போட்டு நன்கு அரைக்கவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு ரசத்துக்கு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் கலந்து வைத்த ரசக்கலவையை ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி பறிமாறலாம்.

மிகவும் சுவையான தக்காளி ரசம் தயார்

No comments:

Post a Comment