Tuesday 29 March 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி !@



ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

print e-mailஎழுத்தின் அளவு:   A+  A-
Bookmark and ShareShare  
ஆல்பம்
டெராடூன், உத்பதிவு செய்த நாள் : மார்ச் 29,2011,23:36 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 30,2011,01:05 IST
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே
Advertisement
சென்னை : "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே அல்ல' என்று முதல்வர் கருணாநிதி தனியார் "டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

அவர் அளித்த பேட்டி :"ஸ்பெக்ட்ரம் 2 ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், சி.பி.ஐ., உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததுடன், கலைஞர், "டிவி' நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்று சொல்கின்றன. இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
இது ஊழலே அல்ல. இது பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்துவிட்டுத் தான் கூறுகிறேன். கலைஞர், "டிவி' கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன், அது பற்றி, பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கை தந்துள்ளார். அது, எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது. ஒரு கடனை அடைக்க, ஒருவரிடம் கடன் பெற்றனர். பிறகு, பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டனர். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித் துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, அதற்கு வருமான வரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு, அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த ஊழல் குற்றச்சாட்டால், தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?
சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது, பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று பூசாரிகள் அந்தக் காலத்தில் பம்பை அடிப்பார்கள்.மக்களும் அதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். காதம் என்றால் தொலைவு. பல்லுக்குப் பல் இரு காதம் என்றால், இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல்.அந்தளவுக்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால், வாய் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல், "ஆமாம், ஆமாம்' என்று ஒப்புக் கொண்டு, பூசாரி பம்பை அடிப்பதைப் போல, பாமர மக்களை ஏமாற்ற ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கின்றனர். அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கின்றனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடப்பதால் அது பற்றி நான் விரிவாக எதுவும் சொல்ல விரும்பவில்லை.ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது சுப்ரீம் கோர்ட். அதில் நான் தலையிட விரும்பவில்லை. அந்த நிறுவனத்துக்கு கடனை கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம் . கடன் வாங்கிய பணம், ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்.

கிரிக்கெட் அரை இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடப் போகின்றன. நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்ற முறையில், இந்திய வீரர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
ஒற்றுமையாக இருந்து, அவரவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து, உற்சாகமூட்டுகிற முறையில் பொறுப்புடன் விளையாடி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு தருகிற வாழ்த்து.இவ்வாறு கருணாநிதி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
Karuppiah Sathiyaseelan - kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
2011-03-30 03:52:24 IST Report Abuse
1 ) சுப்ரீம் கோர்ட்ல் ,சொல்ல வேண்டியது தானே.2 ) நேற்று ,கலைஞர் டிவி க்கு,பணம் கொடுத்ததாக,மும்பையில்,பல்வாவின் சகோதரர் மற்றும் அகரவாலை,சி பி ய்,கைது செய்து,இன்று,2 G குற்றவாளிகளுடன் ,திகார் சிறையில் அடைக்கப் போகிறது.
Share this comment
santhosh gopal - vellore,இந்தியா
2011-03-30 03:12:11 IST Report Abuse
என்னை விட்டுடுங்க, எனக்கு பிரதமர் யார் என்றே தெரியாது? சோனியாவும் தெரியாது, காங்கிரஸ் கட்சியே தெரியாது. ராசாவும் தெரியாது, ஸ்பெக்ட்ரம்னா என்ன? என் பெயர் கருணாநிதி கிடையாது, இது எதிர் கட்சிகளின் சூழ்ச்சி. என் பெயர் தட்சிணாமூர்த்தி. எனக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் சம்பந்தமே இல்லை. கனிமொழி என் மகளே கிடையாது. இது போன்ற அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்.
  • Rate it:
  • 50
  •  
  • 1
Share this comment
kunjumani - chennai ,இந்தியா
2011-03-30 02:41:20 IST Report Abuse
எத்தனையோ லட்சம் கோடி ஊழல் என்பது நடக்காத காரியம் , கற்பனையான ஒன்று , ஆளுங்கட்சியின் நல்லாட்சியில் குறை கண்டுபிடிக்க முடியாதவர்கள் கண்டுபிடித்த ஒன்றுதான் இந்த ஸ்பெக்ட்ரம். சுப்ரீம் கோர்ட் இதை இழப்பீடு என்றுதான் சொல்லுகிறது , இது இழப்பீடு என்றால் மீண்டும் சம்பாதிக்க முடியும் ஆனால் ஜெயலலிதாவினால் மரணமடைந்த நூற்றுக்கணக்கான சாலைபனியாளர்கள் உயிரை திருப்பி கொண்டுவர முடியுமா
  • Rate it:
  • 2
  •  
  • 62
Share this comment
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-03-30 01:54:26 IST Report Abuse
திருட்டு. மு.க அல்லக்கை அப்பு செல்லம் உம் "start மியூசிக்" .... ஏதோ தீஞ்ச வாட வருதே.... நண்பா நீ காதுல பூ வச்சினு மு.க. ஜால்ராவா ஜொய், ஜொய் னு அடிச்சினு வர அழகு இருக்கே....ஆஹா ஆஹா வா ராசா வா இன்னிக்கே எத்தனே பேரு கிட்ட வட்டியும் மொதலுமா வாங்கி கட்டிக்க போறேன்னு தெரியுல... யார் பெத்த புள்ளையோ... உன்ன நெனச்சா ரொம்ப பாவமா இருக்கு...
  • Rate it:
  • 12
  •  
  • 2
Share this comment
k.kaipulla - nj,இந்தியா
2011-03-30 01:37:09 IST Report Abuse
இவர்கள் செய்த ஊழலால் தமிழர்களின் பெயர் உலகம் முழுதும் கெட்டு போய் விட்டது. உலகின் மிக பெரிய ஊழல்காரர்கள் அதாவது ஸ்கேமர்ஸ் என்று கூகிள் செய்தால் முதலில் எல்லாம் சோமாலிய கொள்ளைகாரர்களும், ஈமெயில் மூலம் மக்களை ஏமாற்றும் சோமாலிய ஊழல்காரர்களும் பெயர் முதலில் வரும். ஆனால் இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலும், தமிழ்நாடு பெயரும் முதலில் வருகிறது. அதுவும் ஒரு வலைதளத்தில், தமிழர்களும் தோற்றத்தில் சோமாலிய கறுப்பினத்தவர்களை போன்றே தோற்றம் அளிப்பர் என்று போட்டு இருந்தது, நான் நொந்தே போய்விட்டேன். பாமர மக்களையும் அதன் அடிமைகளையும் தனது பேச்சால் ஏமாற்றி கொண்டு இருக்கிறது. ஆனால் உலக மக்கள் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை எவ்வளவு அசிங்கமாக பேசுகிறார்கள் என்று அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். ஒரே ஒரு குடும்பத்தின் சுய நலத்தால் ஒரு இனமே கேவலபட்டது மிக பெரிய கேவலம்.
  • Rate it:
  • 31
  •  
  • 4
Share this comment
santhosh gopal - vellore,இந்தியா
2011-03-30 03:57:01 IST Report Abuse
தென்னவன், நடு நிலையோடும், எதிர் கட்சியாகவும் தேடினால் கிடைக்கும், நீ ஒரு பக்கா திமுக சொம்பு, உனக்கு எப்படி கிடைக்கும் கூகிள் தேடலில்?...
  • Rate it:
  • 10
  •  
  • 0
Share this comment
Thennavan - chennai,இந்தியா
2011-03-30 02:39:40 IST Report Abuse
கைப்புள்ள... பக்தா....இப்பதான் ஸ்கேமர்ஸ் என்று கூகிள் பண்ணி பாத்தேன்....நீ சொன்ன மாத்ரி எதுவும் இல்லியே....சும்மா கதை விடுறிய....இது மாத்ரி உழல்க்கு என்ன காரணம்...சின்னதா இருக்கும் போத அதுக்கு தண்டனை கொடுக்கணும்... அனால் நம்ம கோர்ட் என்ன சொன்னுச்சு.... அதாம்ப நம்ம டான்சி மேட்டர்தான்... ஸ்பெக்ட்ரம் உடைய சின்ன வெர்சன்தான் டான்சி...ஆமாம்ப அரசங்கத்துக்கு சொந்தமான சொத்தை குறைந்த விலையில் வாங்குவது.... அதானே டான்சிளியும் ஸ்பெக்ட்ரம் நடந்தது...அமௌன்ட்தான் வித்தியாசம்..... அனால் நம்ம கோர்ட் என்ன சொன்னது.... யம்மா ....யம்மா....நீங்க செய்தது உழல என்பதை உங்கள் மனசாட்சிக்கு விட்டுவீடுகிரோம்னு சொன்னுச்சு.... அன்னைக்கு பச்சைய்மக்கு கோர்ட் தண்டனை கொடுத்து இருந்த இன்னைக்கு இந்த ஸ்பெக்ட்ரம் நடுந்து இறுகுமா ..........
  • Rate it:
  • 5
  •  
  • 18
Share this comment
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2011-03-30 01:33:49 IST Report Abuse
தானை தலைவர் சொல்வது சரிதான். ,இது எப்படி ஊழலாக பேர் ?அன்பளிப்பு என்றும் எடுத்து கொள்ளலாம் .ஒரு வியாபாரத்தில் வந்த லாபம் , ஏன் இந்த புரியாத எதிர் கட்சி தலைவர்கள் இப்படி கூக்குரல் போடுகிறார்களோ தெரிய வில்லை. லாபம் தான் இது, கஷ்டப்பட்டு வியாபாரம் செய்தவன் அதன் லாபத்தை எடுக்க கூடாது என்பது என்ன நியாயம்? ராஜா , சாதிக் ஆகியோர் செய்தது என்ன தப்பு? உழைக்கும் மனிதன் லாபத்தை எடுக்க கூடாதா? லாப பணம் ரெண்டுலட்சம் கோடியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற, மறைக்க, சேர்க்க, போட எங்களுக்கு உரிமை இல்லையா? எனக்கு அவ்வளவு பணத்தை எண்ணவோ, அடுக்கவோ, முடியாதுன்னு தான் மகள் கனி மொழி, மகன்கள் அழகிரி,ஸ்டாலின்,பேரன்கள் ,பேத்திகள் என எல்லோரும் சேர்ந்து எண்ணி எண்ணி மூட்டை கட்டி எப்படியெல்லாம் செய்ய வேண்டுமோ அப்படியெல்லாம் செய்து விட்டோம். இப்போ வந்து இதற்க்கு போயி எதிர்கட்சிகள் இப்படி கூச்சல் போடுவது நாகரீகமான ஒரு செய்கையாக தெரிய வில்லை.? விசாரணை தான் நடந்து வருகிறது அல்லவா, அந்த நீண்ட ,நீண்ட, மிகவும் நீண்ட,முடிவே இல்லா , விசாரணைக்கு பின் எந்த ஒரு தீர்ப்பு வந்தாலும் நாங்கள் பணபலத்தால் மீண்டும் நீதி கேட்டு போராடுவோம்,. ஏன் உடன் பிறவா முட்டாள்கள் , எங்களுக்கு அநீதி நடக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள்.
  • Rate it:
  • 21
  •  
  • 8
Share this comment
Mohi - chennai,இந்தியா
2011-03-30 01:32:18 IST Report Abuse
சிபிஐ பேட்டியின் போது 50000 கோடி அரசாங்கத்திற்கு இழப்பு இருக்கலாம் என்றுதான் சொன்னார்கள். இது பிஜேபி அறிவித்தபடி 175000 கோடி ஊழல் என்று சொல்லவில்லை. மேலும் இதே விவகாரம் வட மாநிலங்களில் யாராவது செய்திருந்தால் இங்கு யாரும் பேசக்கூட மாட்டார்கள். இந்த ஊழல் இல்லை என சிபிஐ அறிவித்தால் இத்தனை நாளும் குற்றம் சுமதிக்கொண்டிருந்த சுப்ரமணிய சுவாமி மற்றும் ஜெஜெ, விஜயகாந்த் மீது பொய் பிரச்சாரம் செய்ததாக நடவடிக்கை எடுக்கும்படி அறிவிக்க முடியுமா? தன் அரசியல் சுயநலத்திற்காக மக்களை திசை திருப்பாமல் பதவிக்கு வந்தால் எப்படி கூட்டணி ஆட்சி அமைப்பீர்கள் என்று பிரச்சாரம் செய்யவும். ஒவ்வொரு மனிதனும் எத்தனித்தான் வெளி நாட்டில் செட்டில் ஆகி இருந்தாலும் தன தாய் நாட்டை மறக்கவும் விட்டும் கொடுக்க மாட்டார்கள். அதே போல் ஜெ. ‌தன் (கர்நாடக ) மாநிலதிற்குதன் சப்போர்ட் செய்வரே ஒழிய தமிழ்நாட்டிற்கு அல்ல. காவேரி பிரச்சினை ஜெ ஆட்சில் இருக்கும் போது என்ன செய்தார்? எதிர் கட்சி தலைவியாக இருந்து என்றாவது இதை பற்றி பேசினாரா? இன்று பேச. ஜெ யின் கட்சியில் சரியான ஒரு அரசியல் வாதி உண்டா? ஜெயின் ஆணவம் ஒளியப்போவதும் இல்லை. இதுதான் இவர்களுக்கு கடைசி தேர்தல்.
  • Rate it:
  • 23
  •  
  • 17
Share this comment
Thiyagu Rajan - murray hill,யூ.எஸ்.ஏ
2011-03-30 02:34:58 IST Report Abuse
௫௦௦௦௦ கோடி உனக்கு சும்மாவா .... அவளோ இருந்தா ஒரு 2 கோடி குடுப்பா நாலு BMW கார் வாங்கி வாடகைக்கு உடலாம்...
Share this comment
s.m.sajahan - nottingham,யுனைடெட் கிங்டம்
2011-03-30 01:10:33 IST Report Abuse
இப்படி அழகிய தமிழில் அழகா கதைசொல்லி இன்னும் எத்தனை காலத்துக்கு உலகை ஏமாற்ற உள்ளார் இவர். இவர் சொல்லுவதை கேட்டு இவரை பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா அல்லது நம்மை நாமே பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா??
  • Rate it:
  • 16
  •  
  • 1
Share this comment
Jeyakumar - london,யுனைடெட் கிங்டம்
2011-03-30 01:05:37 IST Report Abuse
80 % பங்கை குடும்பத்தினரிடமும் 20% பினாமியிடமும் கொடுத்து விட்டு எனக்கு டிவி க்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்ன என்னங்க அர்த்தம். தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் இளிசாவாயர்கள் என்று அர்த்தமா?
  • Rate it:
  • 23
  •  
  • 1
Share this comment
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-03-30 01:01:42 IST Report Abuse
ஊழல்ன்னு ஏன் நெனகிறீங்க "அன்பளிப்பு"ன்னு நெனசிக்குங்க....
  • Rate it:
  • 19
  •  
  • 1
Share this comment
vijay - london,யுனைடெட் கிங்டம்
2011-03-30 00:56:42 IST Report Abuse
தலைவர் அளித்த பேட்டியில் "கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர்". கேள்வி : சரி உலகமாக தலைவரே கனிமொழி உமது மகள்,தயாளு அம்மையார் உமது மனைவி என்றால் கலைஞர் டிவி இல் உங்களுக்கு எப்படி உரிமை இல்லாமல் போகும்.200 கோடி ருபாய் கடன் வாங்கி அதையும் வட்டியோடு செலுத்திவிட்டார்கள் என்றால்,அந்த 60 % பங்குதாரர் ஆன உமது மனைவி தயாளு அம்மையார் எப்படி அந்த பெரிய தொகையை தனியாக நின்று சம்பாதித்தார். வரும் ஏப்ரல் 2 இல் 2 G அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தால் உங்கள் கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.
  • Rate it:
  • 15
  •  
  • 1
Share this comment
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-03-30 00:54:21 IST Report Abuse
கேட்பவன் எல்லாம் ........ என்கின்றாரா? பின்னர் ஏன் ராசாவை தூக்கி திகாரிலே வைத்து அழகு பார்கின்றனர்? உலகமே அதிர்ந்து போன ஊழல். உலகிலேயே மிகப்பெரிய மெகாஆஆஆஆ ஊழல். கலைஞர் பெயர் கூட உங்களது நிஜ பெயர் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கருணாநிதி என்பதோ கூட உமது பெயரே அல்ல. டாக்டர் கலைஞர் என்பது கூட நீங்களே பெரும் பாடுபட்டு, பல்கலைகழக மாணவனது பிணத்தின் மீது ஏறிநின்று வாங்கிய பட்டப்பெயர்தானே? அதனால் முத்துவேலர் என்கிற பெயரில் வந்தால் மட்டுமே அதற்க்கு நீங்கள் பொறுப்பு என்று தப்பிக்க பார்த்தாலும் உங்களை மிக நன்றாய் இந்த இந்தியாவே அறியும். மனைவி, மகள் பெயரில் ஓர் தொலைக்காட்சி நிறுவனம் நடத்த "துணைவி தயாளு" அவர்களுக்கு பணம் வந்த விதம் பற்றி சொல்ல முடியுமா? வாசகர்களே உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்,,தயாளு அவர்கள் என்ன பிசினஸ் செய்தார்கள்..தொழில் அதிபரா? எப்படி இந்த அளவிற்கு பணம் படைத்தார்? கனிமொழி கவிஞர் என்றாலும் எவ்வளவு சம்பாதிக்க முடியுமா? யாரிடம் பூவை சுற்றுகின்றார் இந்த நரியார்? வாங்கிய கடனை திருப்பி செலுத்த அப்படி என்ன உலக மெகா தொலைகாட்சியா இவருடையது? இவருக்காக நடத்தப்படும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் சென்சார் இல்லாமல் வரும் காட்சியை ரசிக்கும் கூட்டத்தால் இவ்வளவு பெரிய வியாபாரம் நடக்குமா? திரும்ப செலுத்திய அந்த இருநூற்று பத்து கோடி சம்பாதிக்கப்பட்ட முறையை அறிவிக்க முடியுமா? ஐம்பதாண்டு அரசியல் மோசடி செய்தவர் இறுதியாய் மாட்டிகொண்டார். இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஒட்டு மொத்த குடும்பமே திகாரில் குடியேற போகின்றது. சுப்ரீம் கோர்டாரை விமர்சிக்கவோ அல்லது தனது அல்லகைகள் மூலம் "மணி" கட்ட நினைப்பதோ முடியாமல் தவிக்கும் தவிப்பில், மக்களை திசை மாறி சிந்திக்க தடாலடியாய் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியிலே படுத்துக்கொண்டு அனுதாபத்தை பெறுவதற்கு முயற்சி செய்வார். ஒரு மணி நேர உண்ணாவிரதம் இருந்து கடற்கரை குளு குளு காற்றை அனுபவித்து இலங்கை போரையே நிறுத்தியவருக்கா தெரியாது? எப்படி ஒட்டு வாங்குவதென்று? செல்லுபடியாகாதுங்கோ..!!
  • Rate it:
  • 47
  •  
  • 2
Share this comment
Nanthagopal Krishnan - tustin,யூ.எஸ்.ஏ
2011-03-30 00:52:56 IST Report Abuse
அட பாவிங்களா..! இதுக்கு மேலயும் கொள்ளை அடிக்க ப்ளான் இருந்ததா ? ... அப்போ உங்க அத்தியாத்தில் ஊழல் என்பது எத்தனை கோடி..?
  • Rate it:
  • 15
  •  
  • 0
Share this comment
Vaigai Selvan - chennai,இந்தியா
2011-03-30 00:52:34 IST Report Abuse
ஸ்பெக்ட்ரம் ஊழல் அல்ல.. உலகத்தின் முன்னால் தமிழகத்தை ஏன் இந்தியாவையே தலை குனிய வைத்த மாபெரும் கொள்ளை..உங்களின் உளறலுக்கு இருக்கு ஆப்பு.. இதயமே இல்லையா உங்களுக்கு ..... அது இருந்தால் இப்படி உளற மாட்டீர்கள்..
  • Rate it:
  • 17
  •  
  • 4
Share this comment
arun - chennai,இந்தியா
2011-03-30 00:43:26 IST Report Abuse
இப்டியே பேசுங்க !! அப்ப தான் ஜெயிக்கற மாதிரி இருக்கற தொகுதிலயும் மண்ணை கவ்வலாம் !! வெல்டன் !! சொந்த செலவில் ஆப்பு !! நீ குட்டிகரணம் அடித்து சொன்னாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை !! மிச்சம் இருக்கற கொஞ்ச நாலாவது சந்தோசமா இருந்துட்டு போங்க !!
  • Rate it:
  • 21
  •  
  • 7
Share this comment
santhosh gopal - vellore,இந்தியா
2011-03-30 00:39:02 IST Report Abuse
கருணாநிதி வேட்பு மனுவில் என் மனைவிக்கு கலைஞர் தொலைகாட்சியில் 60 விழுக்காடு பங்கு உள்ளது, அந்த பங்கு ஆறு கோடி ருபாய் மதிப்புடையது என்று குறிபிட்டுள்ளார். அதாவது 60 விழுக்காடு பங்கு 6 கோடி ரூபாய் என்றால் முழு பங்கு 10 கோடி ரூபாய்க்கு கீழ் தான் இருக்கும். 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிறுவனத்திற்கு (ஆரம்பிக்கபடாத) 213 கோடி ரூபாய் யார் கடனாக கொடுப்பார்கள்? அப்படி கொடுப்பார்கள் என்றால் ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகளை அடகாக வைத்துகொண்டு 10 கோடி ரூபாய் கொடுக்க முடியுமா மிஸ்டர் மஞ்ச துண்டு? ...சரி கடனே வாங்கியிருக்கிறார் என்றே வைத்து கொள்வோம், கடனை எப்போது திருப்பி அடைத்துள்ளார்கள்? குற்றச்சாட்டு எழுந்த பிறகு அடைத்துள்ளார்கள். பணம் துபாயில் உள்ள ஒரு வங்கியிலிருந்து .......... மூலம் சென்னையில் உள்ள ஒரு வங்கிக்கு கலைஞர் தொலைகாட்சி வங்கி கணக்கில் பரிமாற்றம் நடந்துள்ளது, ஆனால் கடன் திரும்ப அடைத்ததற்கு எந்த வித பரிமாற்றமும் நடைபெறவில்லை. இது நடந்ததோ இரண்டு வருடங்களுக்கு முன்னாள், ஆனால் திருப்பி அடைத்தோ, குற்ற சாட்டு எழுந்த பிறகு, அதாவது 2011 . இது ஊழல் என்பதை விட உள்நாட்டு பாதுகாப்பு சம்பந்த பட்டது. இப்போது மஞ்ச துண்டு ஒத்துகொண்டார், கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, அதனால் கனிமொழியையும், ராஜாதி அம்மாளையும் கைது செய்து உண்மையை நிரூபிக்க இவர் தயங்க கூடாது. முதலில் ராஜா தலித் என்பதால் பழி வாங்கபடுகிறார், பிறகு இந்த ஊழலை ராஜா ஒருவரால் செய்திருக்க முடியுமா என்கிற கேள்வி? பிறகு குற்றம் நிரூபிக்க பட்டால் ராஜாவை கட்சியிலிருந்து நீக்க தயங்கமாட்டேன், பிறகு ராஜ குற்றம் செய்யவில்லை, இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழலே இல்லை என்கிறார்? ஸ்பெக்ட்ரம் ஊழலே இல்லை என்றால் ராஜா ஏன் திஹார் சிறையில் உள்ளார்? பாவ்லா ஏன் திஹார் சிறையில் உள்ளார்? சுப்ரீம் கோர்ட் என் கண்டனம் தெரிவிக்கிறது? அவர்களுக்கு ஒரு வேலை பைத்தியமோ? CAG அறிக்கை பொய்யோ? அணைத்து வட மாநில ஊடகங்களையும் ஜெயலலிதா நடத்துகிறாரோ? உங்கள் பாணியில் ஜெயலலிதாவுக்கு உங்களை பிடிக்காது அதனால் பொய் பிரசாரம் செய்கிறார் என்றே வைத்து கொள்வோம், வட மாநில பத்திரிக்கைகளும் உங்களை பிடிக்காமல் அவதூறு பரப்புகிறார்களோ? எந்த தவறும் செய்யாமல் ராஜா மந்திரி பதவி விலகி திஹார் சிறையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நான் ஏற்கனவே சொன்னேன் அல்லவா, எதிர் கட்சிகள் பிரசாரத்தில் அனல் பறக்கும் என்று, ஜெயலலிதா செய்யும் பிரசாரம், விஜயகாந்த், அவரின் மனைவி, கம்யுனிஸ்ட் தோழர்கள் செய்யும் பிரசாரம், எல்லாம் இப்போது தெரியாதவர்களுக்கும் தெரிந்துவிட்டது. நீங்கள் பத்து தொகுதியில் வெற்றி பெற்றாலே அதிசயம் தான்.
  • Rate it:
  • 49
  •  
  • 9
Share this comment
Nathan - manama,பஹ்ரைன்
2011-03-30 00:38:27 IST Report Abuse
திமுக காங்கிரஸ் இரண்டும் ஆட்சியில் இருக்கும் வரை ஸ்பெக்ட்ரம் ஒரு ஊழலே அல்ல
  • Rate it:
  • 23
  •  
  • 2
Share this comment
srideesha - atlanta,யூ.எஸ்.ஏ
2011-03-30 00:38:11 IST Report Abuse
நடிகன் படத்துல கவுண்டமணி சத்யராஜை பார்த்து ஒரு வசனம் சொல்வது தான் ஞாபகம் வருது. அடங்கொக்கமக்கா, மொள்ளமாரிய பார்த்து இருக்கேன்!!! கேப்மாரிய பார்த்து இருக்கேன்!!! முடிச்சவுக்கிய பார்த்து இருக்கேன்!!! ஆனா மூணு பேரையும் ஒண்ணா இங்கதான் பாக்கறேன்!!! அடங்கொக்கமக்கா!!! அடங்கொக்கமக்கா!!!
  • Rate it:
  • 41
  •  
  • 1
Share this comment
Sundar - bangalore,இந்தியா
2011-03-30 00:37:56 IST Report Abuse
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ... ஹையோ ஹையோ ... உன்ன நெனச்சா ஒரு பக்கம் பாவமாவும் ஒரு பக்கம் சிரிப்பாவும் இருக்கு .. ஊழல் இல்லாமலா ராசாவ கைது பண்ணி திஹார்ல அடைச்சாங்க .. ? ராசா பேர குற்றபதிரிக்கைல தாக்கல் சென்ஜாங்கா. ..ஊழல் இல்லாமலா கலைஞர் டிவி ku CBI ரைடு வந்தாங்க. .. ? கனிமொழி தயாளு அம்மா கிட்ட விசாரணை செஞ்சாங்க ..? ஊழல் இல்லன்னா கனிமொழி தயாலாம்மா ஏன் வீட்ல வச்சி விசாரிக்காம கலைஞர் டிவி ஆபீசுக்கு விடியகாலைல வந்தாங்க .. .. போங்க தாத்தா .. இந்த வார ஆனந்த விகடன் ல உங்கள பத்தி புட்டு புட்டு வச்சிட்டாங்க .. நீங்க பேசறதெல்லாம் வச்சி பாத்த உங்க மனசுல வடிவேல் சொல்ற டயலாக் மாதிரி "இன்னுமாட இந்த ஊரு நம்மள நம்பிகிற்றுக்கு"... வடிவேல் திமுக வுக்கு பிரச்சாரத்துக்கு வந்திருக்கார்ல அந்த எபெக்ட் ல பேசுறிங்க.. உங்க சாயம் வெளுத்து நாளாச்சு .. உங்களுக்கும் வயதாகி விட்டது அதனால் மக்கள் உங்களுக்கு ஓய்வு கொடுத்து விட முடிவு செய்து விட்டார்கள் .. நிம்மதியாக ஓய்வு எடுத்து காலத்தை கழிக்கலாம் ... குடும்ப கொள்ளை ஊழல் + தமிழர் துரோக இத்தாலி அம்மையார் + ஜாதி வெறி பாசமுள்ள மகன் கட்சி கூட்டணிக்கு மக்கள் மரண அடி கொடுக்க போவது உறுதி .. வெற்றி அதிமுக விற்கே .. வாழ்க ஜனநாயகம் ...
  • Rate it:
  • 16
  •  
  • 0
Share this comment
k.kaipulla - nj,இந்தியா
2011-03-30 00:32:36 IST Report Abuse
மக்களே மக்களே மக்களே, போதும் மக்களே, போதும். இனிமேலும் இது போன்ற பேச்சுக்களை எவ்வளவு நாள்தான் கேட்டு கொண்டு இருப்பது. இப்படி மக்களை முட்டாளை விட முட்டாளாக நினைத்து பேசும் அரசாங்கம் நமக்கு தேவைதானா? எவ்வளவு வருடங்கள் இப்படி நம்மை கேவலமாக நடத்த அனுமதித்து கொண்டு இருப்போம் மக்களே. நாம எல்லாம் என்ன பைத்தியகார ஆஸ்பத்ரிலையா இருக்கோம். யோசிச்சு பாருங்க மக்களே. எல்லோருமே கிளம்புங்க இந்த முறை. எல்லோருமே போய் ஓட்டு போட்டு துரத்தி விடுங்க. இதுக்கு மேலையும் இந்த கொடுமைகளை சகித்து கொண்டு வாழ முடியுமா உங்களால்? உங்களுக்கு வேணும் என்ற இலவசங்களை அந்த அம்மாவும் கொடுக்கிறது. அதுக்கு மேலேயும் கொடுக்கிறது. அப்புறம் என்ன? போங்க, எல்லோரும் போங்க. நமக்கு ஆட்சி மாற்றம் கண்டிப்பா வேணும். இனிமேலும் முட்டாளாய் வாழ்ந்து முடியாது.
  • Rate it:
  • 26
  •  
  • 1
Share this comment
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-03-30 00:29:47 IST Report Abuse
இன்னும் கொஞ்ச நாள் போனா "கனிமொழி, ஸ்டாலின், அழகிரி" இவங்கெல்லாம் என் பசங்களே இல்லன்னு(??) சொல்லுவி்ங்க போல இருக்குது....
  • Rate it:
  • 21
  •  
  • 1
Share this comment
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-03-30 00:25:17 IST Report Abuse
என்ன ரீலா விடுறீங்க??? போதும் நிறுத்துங்க ரொம்ப அளக்காதீங்க....உங்கள மாதிரி ஒரு மட்டமான அரசியல்வாதியா இந்த உலகமே பாத்து இருகாதுயா...
  • Rate it:
  • 21
  •  
  • 6
Share this comment
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-03-30 00:21:52 IST Report Abuse
என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர்........... அப்ப அந்த 60 சதவீதம் யாருது.... இங்கே எவனும் காதுல பூ வச்சின்னு இல்ல..... உங்க கட்சிக்காரன் madurai அ(க)ப்பு வேணும்னா நீ சொன்னதெல்லாம் கரெக்டுன்னு சொல்லுவான்.... செயின் சப் செயின் சப்... சூப்ரப்பு.....
  • Rate it:
  • 16
  •  
  • 0
Share this comment
Ariram Singh K - new york,யூ.எஸ்.ஏ
2011-03-30 00:17:21 IST Report Abuse
நாங்களும் ஒத்துக்கொள்கிறோம் ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல!!! கொள்ளை, கொள்ளை மாபெரும் கொள்ளை.
  • Rate it:
  • 21
  •  
  • 4
Share this comment
kavitha - perambalur,இந்தியா
2011-03-30 00:16:56 IST Report Abuse
நீங்கள் சொல்வது 200 % உண்மை ! இந்த அதி மேதாவி adamk சொம்புகளுக்கு ராஜா ஒரு அப்பாவி என்பது எப்போதொது தான் தெரிய போகிறதோ... ராஜா செய்ததென்ன... அவர் வெகுளிதனமா பிரஸ்ட் வந்தவருக்கு கொடுத்திட்டார்...இதனால இல்லப்பு அரசாங்கத்துக்கு...ஜப்பான் ல கூட அணுமின் சக்தி யா உஸ் பண்ணிட்து இருந்தாங்க...ஆனா எப்பபோ சுனாமி வண்டு பெரிய நாசம் ஆய்ருச்சு அதுக்காக அணுமின் நிலையம் அமைக்க ஆர்டர் போட்ட வர [அளிக்க முடியுமா.......நீங்கள் கலி உக காந்தி...உங்க சீடர் ராஜா வும் அதுபோல்தான்
  • Rate it:
  • 8
  •  
  • 33
Share this comment
Muralikrishnan - barcelona,ஸ்பெயின்
2011-03-30 03:19:58 IST Report Abuse
நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம் அவர் ஒரு கலி உலக காந்தி என்றால்... நீயும் ஒரு கலி உலக கன்னகியாய்தான் இருப்பாய். நீ இந்த அளவுக்கு சபோர்ட் பண்ணும்போதே தெரிகிறது நீ கலைஞர் ஆட்சியில் காசு கொடுத்து goverment வேலை வாங்கி இருப்பாய்... அதிலும் தமிழ் ஆசிரியை ஆக இருப்பாய் அதனால்தான் இந்த அளவுக்கு தமிழை கொலை செய்கிறாய்.(Are you read your comments before sending it?) ரொம்ப கேவலமா இருக்கு......
  • Rate it:
  • 14
  •  
  • 0
Share this comment
Vaigai Selvan - chennai,இந்தியா
2011-03-30 01:33:20 IST Report Abuse
நாராயணா..... இந்த கொசு தொல்ல தாங்கமுடியலப்பா.....
  • Rate it:
  • 15
  •  
  • 0
Share this comment
Elayaraja - wellington,நியூ சிலாந்து
2011-03-30 01:24:18 IST Report Abuse
Kavitha, Can we have ans why Sathik died?. Wait for another few days, you will know what is the ans from Supreme Court, whether Raja is "APPAVI" or "ADAPAVI"...
Share this comment
Govind - delhi,இந்தியா
2011-03-30 01:22:22 IST Report Abuse
தலிவா இதை கோர்டில் போய் சொல்ல சொல்லுங்கள் ... அவங்க உடுக்கை அடிக்கும் போது உங்க குடும்பம் எல்லாம் அய்யோ அம்மான்னு ஆடுவீங்க ..அதா நாங்க பார்கதான் போறோம் ......
Share this comment
Govind - delhi,இந்தியா
2011-03-30 01:21:20 IST Report Abuse
செவுத்துல இருக்குற பல்லிக்கு tube லைட் எப்படி எரியுதுன்னு சொன்ன புரியாது ... அதா புரிஞ்சிக்கிற சக்தியும் கிடையாது ..அது போல தான் நீங்க .. நீங்களும் உங்க தலைவனும் ஐயோ அம்மா போபோர்ஸ் ஊழல் அது இது என்று பேசி ... சென்னையில் போபோர்ஸ் பீரங்கி போன்று பொம்மைங்களை வைத்தது எல்லாம் மறந்து போச்சு .... அது சரி காட்சிகள் மாறிவிட்டது ...இப்போ காங்கிரஸ் உங்க பக்கம் ... இப்ப அதுவும் இது மாதிரி தான் ......
  • Rate it:
  • 14
  •  
  • 0
Share this comment
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-03-30 01:06:24 IST Report Abuse
உன் தலிவரு நீ சொன்ன மாதிரி.... "கலி உக காந்தி" இல்ல சீடர் (??) ராஜாவோட கம்பிக்குள்ள கலி திங்க போற .....?????....... (காந்தி பேர சொன்னாலே இவனுங்களுக்கு புண்ணியம் சேந்துடும்)...
  • Rate it:
  • 12
  •  
  • 0
Share this comment
Amanullah - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-03-30 00:13:07 IST Report Abuse
தேர்தல் கமிஷன் வரம்பு மீறுகிறது, அதிகாரிகள் ஹிட்லர் போல் செயல்படுகின்றனர் என நீதிமன்றத்திலும், ஊடகங்களிலும் ஏன் குடியரசு தலைவரிடமும் முறையிடும் நீங்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உங்கள் கட்சி பொது குழுவின் தீர்மானத்தையும் (ராசாவை தியாகி என பிரகடனம் செய்தது) உங்கள் தரப்பு நியாயங்களையும் மக்கள் முன் வைக்கவில்லையே ஏன்?
  • Rate it:
  • 31
  •  
  • 0
Share this comment
நன்றி  Dinamalar - No 1 Tamil News Paper

No comments:

Post a Comment