Wednesday 30 March 2011

கொ‌ண்ட‌க் கடலை‌க் (சுண்டல்) குழ‌ம்பு


கொ‌ண்ட‌க் கடலை‌க் (சுண்டல்) குழ‌ம்பு

கொ‌ண்ட‌க் கடலை‌க்கு என்று தனி சிறப்பு உண்டு, உடலு‌க்கு ‌மிகவு‌ம் ச‌க்‌தியை அ‌ளி‌க்கவ‌ல்லது. உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்பவ‌ர்க‌ள் கொ‌ண்டை‌க் கடலை சா‌ப்‌பிடுவது மிகவும் நல்லது. க‌ர்‌ப்‌பி‌ணிக‌ளுக்கு மிகவும் நல்லது குழந்தைகள்,முதியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. (சுவை இருந்தால் ஆரோக்கியமும் இருக்காது–ஆரோக்கியமும் இருந்தால் சுவை இருக்காது ) ஆனால் இதில் சுவையும், ஆரோக்கியமும் சரி சமமாக உள்ளது. சரி கொ‌ண்ட‌க் கடலையை குழ‌ம்பு வை‌த்து ருசிக்க தயாரா?!!!
d
தேவையானப் பொருட்கள்
கொண்டக்கடலை  250
வெங்காயம் – 100தக்காளி – 2
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 5
தேங்காய்  அரை மூடி
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள்  1 ஸ்பூன்
மல்லித் தூள் – ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகுஉளுந்து, சீரகம், மிளகு, சோம்பு – தாளிக்க 
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை
செய்முறை
sundal-kuzhambu
கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து விடவும்.
கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றிக் கா‌‌ய்‌ந்தது‌ம் கடுகு,உளுந்துசீரகம், மிளகு, சோம்புகறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு நன்கு வதக்கியதும். ‌த‌க்கா‌ளியை‌ப் சேர்த்து நன்கு வதக்கவும்.
த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம் ம‌ஞ்ச‌ள் தூ‌ள்‌‌மிளகா‌ய் தூ‌ள்மல்லித் தூள்,ஆ‌கியவ‌ற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
அத்துடன் ஊ‌றிய கடலையை போட்டு நன்கு கிளறிய பின்பு தண்ணீரில் புளியை கரைத்து அதில் ஊற்றவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த தேங்காயை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கு‌க்கரை மூடி 5 விசில் வந்ததும் மல்லி இலை தூவி இறக்கி விடவும்.


சுவையான கொ‌ண்டை‌க் கடலை‌க் குழ‌ம்பு தயார்
கொ‌ண்டை‌க் கடலை‌க் குழ‌ம்பு ‌தி‌க்காக இரு‌க்கு‌ம். சாதம், சப்பாத்தி, இ‌ட்‌லி, தோசை‌க்கு ‌மிகவும் சுவையாக இரு‌க்கு‌ம்.
இதில் உருளைக்கிழங்கு சேர்த்தால் சுவை இன்னும் அதிகரிக்கும்.



No comments:

Post a Comment