Wednesday 30 March 2011

ம ம க -வின் சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி உறுதியானது!


ம ம க -வின் சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி உறுதியானது!

E-mailஅச்செடுக்க
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் சின்னமாக இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்குவது உறுதியாகியுள்ளது.
த மு மு க என்கிற இயக்கத்தின் அரசியல் பிரிவான ம ம க  எனப்படும் மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம் ஆகிய தொகுதியில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. தங்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை அவர்கள் கோரியிருந்தனர்.
ஆனால், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் மெழுகுவர்த்தி சின்னம் கேட்டிருந்தார். இதனால் மமகவுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்படுமா என்ற கேள்வியிருந்தது. இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர் தன் கோரிக்கையைத் திரும்ப பெற்றுள்ளார். எனவே 3 தொகுதிகளிலும் பொதுவான சின்னங்களாக இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ம ம க-வுக்குக் கிடைப்பது   உறுதியாகி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும்  பொது சின்னமாக இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கேட்டு இருந்தனர். தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து அங்கீகாரம் பெறாத கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது சின்னம் பெற வேண்டுமென்றால் 10 சதவீத தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால் விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளில் மட்டும் தான் போட்டியிடுகிறது. எனவே பொது சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. தேர்தல் விதிகளின் படி அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குச் சின்னங்களை ஒதுக்கீடு செய்வார்கள்.
Share Link: Share Link: Bookmark Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Technorati Stumble Upon Ask myAOL MSN Live
கருத்துக்கள் (0)Add Commentஇந்நேரம்.காம்

No comments:

Post a Comment