Wednesday 23 March 2011

ஆடு, கோழிகளைக்கூட விட்டு வைக்கவில்லையே: கருணாநிதி வேதனை


Dinamalar - No 1 Tamil News Paper
 
 
பதிவு செய்த நாள் : மார்ச் 22,2011,23:30 IST
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே
Advertisement
சென்னை: ""தேர்தல் கமிஷன், எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக கெடுபிடி செய்து வருகிறது. வாகன சோதனையில், ஆடு, கோழிகளைக் கூட விட்டுவைக்கவில்லை,'' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பணிகளில், அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. மனு தாக்கலும் துவங்கி விட்டது. இதுவரை நடந்த தேர்தல்களில், ஓட்டுப்பதிவு நடந்த இரண்டொரு நாளில், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால், தற்போது இதுவரை இல்லாத ஒரு முடிவாக, ஏப்ரல் 13ல் ஓட்டுப்பதிவு நடந்தபோதும், மே 13ம் தேதி தான் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. எதற்காக இந்த இடைவெளி? அரசியல் கட்சிகளுக்கு நேரம் கொடுக்காமல், அவசரம் அவசரமாக ஏன் தேர்தலை நடத்துகிறார்கள்? எல்லாம் தேர்தல் கமிஷனின் முடிவு. அவர்களுக்கு எதிராக, யாரும் வாய் திறக்கக் கூடாது. ஓட்டுப்பதிவு நாளை, சற்று தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதை ஏற்க முடியாதென தேர்தல் கமிஷன் தள்ளிவிட்டது.

தேர்தல் கமிஷனின் உத்தரவு என்று கூறி, மற்றொரு கொடுமையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் யாரும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லக்கூடாது. இதைப்பற்றி, பத்திரிகைகள் தினமும் செய்திகளை வெளியிடுகின்றன. தேர்தல் கமிஷனின் வாகனச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 29ம் தேதி கடை அடைப்பு நடத்த வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தப் பிரச்னை நீடித்தால், தேர்தலை புறக்கணிப்போம் என்றும், வணிகர்கள் கூறியுள்ளனர்.

வாகன சோதனையில், ஆடு, கோழிகளைக்கூட விட்டுவைக்கவில்லை. வாக்காளர்களுக்கு பிரியாணி போடுவதற்காக, மொத்தமாக கொண்டுபோவதாக கற்பனை செய்துகொண்டு, ஆடுகளையும், கோழிகளையும் ஏன், பீடிகளையும் கூட பறிமுதல் செய்துள்ளனர். விற்பனைக்காக எடுத்துச்சென்ற கொலுசுகளையும், நகைகளையும் கூட பறிமுதல் செய்துள்ளனர். மதுரையில், அரசியல் கட்சியினரின் வெங்காய கிடங்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, சோதனை நடத்தியுள்ளனர். தேர்தல் கமிஷனின் இந்த கெடுபிடிகளை எதிர்த்து, தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் கமிஷன், இன்னும் தனது செயல்பாட்டை நிறுத்தவில்லை.

இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, டி.ஜி.பி., முதல், மாவட்ட கலெக்டர்கள் வரை பல பேரை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க.,வினர் புகார் அளித்தனர் என்ற ஒரே காரணத்திற்காக, நேர்மையாக பணிபுரிந்த அதிகாரிகள் மீதான புகாரில் உண்மை இருக்கிறதா என்று விசாரிக்காமல், தமிழக அரசிடம் கேட்காமல் கூட, தன்னிச்சையாக @தர்தல் கமிஷன் மாற்றியுள்ளது. தேர்தல் கமிஷன், கெடுபிடியில் ஈடுபட்டிருப்பதாக நாம் குற்றம் சாட்டவில்லை. பத்திரிகைகள் தினமும் வெளியிடும் செய்திகளைப் பற்றி, தேர்தல் கமிஷன் கவலைப்படுகிறதா? "மங்கை சூதகமானால், கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால், எங்கே மூழ்குவது?' என்ற தேவர் கூறிய பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment