Wednesday 23 March 2011

லோகாட்டன் ஆடுகள் !


Wednesday, March 23, 2011 4:23 PM ISTசிறுவர்மணி
லோகாட்டன் ஆடுகள்

First Published : 19 Mar 2011 10:50:00 AM IST

பொதுவாக நாம் இரண்டுகொம்புகள் உள்ள மிருகங்களைத்தான் பார்த்திருப்போம். இப்போது நான்கு கொம்புகள் உள்ள இந்த ஆட்டைப் பாருங்கள். இது "மான்க்ஸ் லோகாட்டன்' எனும் இனத்தைச் சேர்ந்த ஆடு. இது நம் நாட்டில் இல்லை.

பிரிட்டனுக்குப் பக்கத்தில் உள்ள "மான்' தீவில் இருக்கிறது. சில லோகாட்டன் ஆடுகளுக்கு நான்கு முதல் ஆறு கொம்புகள் வரை இருக்கும். இந்தக் கொம்புகளில் இரண்டு கொம்புகள் மட்டும்தான் வலிமையாகவும் பெரிதாகவும் இருக்கும்.
16:66   وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً  ۖ نُّسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ
16:66நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.
16:80   وَاللَّهُ جَعَلَ لَكُم مِّن بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُم مِّن جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ  ۙ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَىٰ حِينٍ
16:80அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்; உங்கள் பிரயாண நாட்களிலும் (ஊரில்) நீங்கள் தங்கும் நாட்களிலும் (பயன்படுத்த) உங்களுக்கு எளிதாக இருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை உங்களுக்கு ஆக்கினான். வெள்ளாட்டின் உரோமங்கள் ஒட்டகையின் உரோமங்கள், செம்மறியாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (அவற்றில்) சுகத்தையும் அமைத்துத் தந்திருக்கிறான்.

No comments:

Post a Comment