Wednesday 30 March 2011

சத்துமாவு & சத்துபானம்




சத்துமாவு & சத்துபானம்

சத்து மாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். டீ, காபிக்குப் பதில் காலையும் மாலையும் அருந்தி வந்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். உடலுக்குத் தெம்பூட்டும் இன்னும் எத்தனையொ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். 
grains-pulses3

தேவையான பொருட்கள்

  • கம்பு - 100 கிராம்
  • ராகி 100 கிராம்
  • கோதுமை - 100 கிராம்
  • பச்சஅரிசி 100 கிராம்
  • உளுந்து - 100 கிராம்
  • பாசிப்பயறு - 100 கிராம்
  • கொள்ளு - 100 கிராம்
  • வேர்க்கடலை  100 கிராம்
  • முந்திரி 100 கிராம்
  • பாதாம் 100 கிராம்
  • ஏலக்காய் 100 கிராம்
  • ஜவ்வரிசி 100 கிராம்
  • மக்காச் சோளம் - 100 கிராம்
  • கொண்டக்கடலை - 100 கிராம்
  • பொட்டுக்கடலை - 100 கிராம்

செய்முறை

hp1

  • மேலே கூரிய அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும்.
  • வறுத்தவுடன் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.
  • மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி வைத்தால் வேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம்.
சத்துபானம் தயாரிக்கும் முறை
milk-sugar1

தேவையான பொருட்கள்

  • சத்துமாவு - 2 ஸ்பூன்
  • பால் - 2 டம்ளர்
  • தண்ணீர் - 2 டம்ளர்
  • சர்க்கரை - தேவைக்கு

செய்முறை

hd

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.
  • கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும்.
  • சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கி இறக்கவும்.
  • அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான சத்துமாவு மானம் தயார்

குறிப்பு

  • வயதானவர்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் குடுக்கவும்.
  • சத்துபானம் திக்கா இல்லாமல் கொஞ்சம் தண்ணியா இருக்கட்டும்.
  • அதிகம் சூடாக குடிக்கக் கூடாது.

No comments:

Post a Comment