ஆருஷி கொலைவழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரான ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரை நீதிமன்ற வாயில் வைத்து ஒரு இளைஞரால் தாக்கப்பட்டார். தாக்கிய நபர் உத்சவ் சர்மா என அறியப்படுகிறார். இவரை கைது செய்த காவல் துறையினர், ராஜேஷ் தல்வாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த 2008-ம் மே 16-ம் நாள் நொய்டாவில் 14 வயதான ஆருஷி தல்வார் தமது வீட்டில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல் துறையினர் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரைக் கைது செய்தனர். ஆருஷி தல்வார் கொலை செய்யப்பட்டக் கிடந்த அறைக்கு அருகே அவ்வீட்டின் பணியாளர் ஹேம்ராஜும் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
இந்தக் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என இன்னும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. இந்நிலையில் இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்த ராஜேஷ் தல்வாரை உத்சவ் சர்மா தாக்கியுள்ளார். இதில் சுவாரசிமான விடயம் என்னவென்றால், இதே உத்சவ் சர்மா கடந்த 2010-ம் ஆண்டு பெப்ரவரி 8-ம் நாள் 14 வயது ருச்சிக்கா கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹரியான முன்னாள் டிஜிபி ரத்தோரை இதே போல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கடுமையாக தாக்கியவர். ருச்சிகா கற்பழிப்பு வழக்கில் முன்னாள் டிஜிபி ரத்தோர் 19 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் குற்றவாளி என உறுதிபடுத்தப்பட்டு ஒன்றரை வருடம் கடூழிய சிறைத் தண்டனை ( போதுமா இது ? ) அனுபவித்து வருகிறார். கற்பழிக்கப்பட்ட ருச்சிக்கா 1993-ம் ஆண்டு நஞ்சருந்தி தற்கொலைச் செய்துக் கொண்டார். இதற்கு ரத்தோரின் மிரட்டல் ஒரு காரணம் என சொல்லப்பட்டது.
யார் இந்த உத்சவ் சர்மா?
ரத்தோர் தாக்கப்பட்ட போது நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்ட வாராணாசியைச் சேர்ந்த உத்சவ் சர்மா அப்போது ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட ஒரு நபர். ஆரம்பத்தில் அவர் ஒரு மனநிலை சரி இல்லாதவர் எனக் காவல்துறை கூறியது. 29 வயது உதசவ் சர்மா அகமதாபாத்தில் உள்ள National Institute of Design(NID) பட்டய மேற்படிப்பை முடித்தவர். மிகவும் புத்திசாலி மாணவராக அறியப்பட்ட இவர் மேற்படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியவர். இவரது பெற்றோர் இருவருமே பேராசியர்கள், நல்ல வசதியான படித்த குடும்பத்தில் பிறந்தவர். மனநிலை பிசகிய நபர் இல்லை என அவரது தந்தை எஸ்.கே.சர்மா முன்பு செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
உதசவ் சர்மாவின் சட்டைத் தனது கையில் எடுத்துக் கொள்ளும் செயலைப் பலர் கண்டித்தாலும், சமுதாய அக்கிரமங்களை எதிர்த்து போராடத் துடிக்கும் ஒரு நபராக பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். உத்சவ் சர்மாவின் செயல் தனிமனித கோபமா? அல்லது சொரணைக் கெட்டுக் கிடக்கும் இந்த சமுதாயம் செய்ய வேண்டியதை தானே செய்ய முனைபவரா? இல்லை உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவரா? எனத் தெரியவில்லை. இருந்தாலும் இரண்டு தாக்குதலிலும் அவரின் குறி சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சி செய்து/ கொலை செய்தவர்கள் என அறியப்பட்டவர் மீதே இருப்பதால், நிச்சயம் சிறார் பாலியல் கொடுமையைக் கண்டிக்கும் வண்ணமே இவர் இவ்வாறு செய்திருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது. இவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில் தனிநபராக ஒருவரைத் தாக்குவதற்கு தனி ”தில்” வேண்டும். சீரழிந்த சமுதாயத்தின் புல்லுருவிகளை களைய முனையும் அவருக்கு ”சபாஷ்” போடவே தோன்றுகிறது.
இதற்கிடையில் ஹெட்லைன் டுடேயின் முதன்மை செய்தி ஆசிரியர் ராகுல் கன்வால் தனது டிவிட்டில் உத்சவ் சர்மாவினைப் பற்றிக் கூறியிருப்பது சிரிக்க வைக்கிறது. ராஜேஷ் தல்வாரைத் தாக்கியது கொடூரம் ! மனித தன்மையற்ற செயல் எனக் கூறும் ராகுல் கன்வால், சிறார் மீது நடத்தப் படும் வன்செயல்களையும், அக்குற்றவாளிகள் அனைவரும் காவல்த்துறை, மருத்துவர் என உயர்பதிவிகள் இருப்பதால் தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் செயலை கண்டிக்காதது ஏன்?.
ஜட்டிப் போடாமல் வரும் யானா குப்தா, நீது சந்திராவின் கால் இடுக்கில் காமெராவை வைத்து கவர் ஸ்டோரிப் போட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில் மன நலக் காப்பகத்துக்கு போக வேண்டியவர் யார் ???
இப்பதிவினை எழுதியவர் இக்பால் செல்வன். மேலும் இக்பால் செல்வனின் எழுத்துக்களைப் படிக்க இங்கு செல்லவும். இவர்கொடுக்கி என்னும் வலைப்பூவில் செய்திகள்/கலை சம்பந்தமான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

 http://tamilcharam.net