Tuesday, 5 April 2011

கிரைண்டர் அரசியலால் சிறு உற்பத்தியாளர்கள் கலக்கம் ?


-நன்றி:உங்களுக்காக

Dinamalar

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011,02:36 IST
மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 03,2011,04:37 IST
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே
Advertisement
தமிழக அரசியல் கட்சிகள் அறிவித்த இலவச கிரைண்டர், மிக்சி அறிவிப்பால், கோவை கிரைண்டர் தயாரிப்பாளர்களிடையே இரு வேறு கருத்துகள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வும் போட்டி போட்டு இலவச அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. இதில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மிக்சி, கிரைண்டர், மின் விசிறி. கோவை நகரம், கிரைண்டர் தயாரிப்புக்கு பெயர் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் கிரைண்டர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன.இங்கு, 200க்கும் அதிகமான தொழிற்சாலைகள், மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கிரைண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. 

கிரைண்டர் உதிரி பாகங்கள் தயாரிப்பில், 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளன. இத்தொழிலில் நேர்முக மற்றும் மறைமுகமாக, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும், அதிகளவில், "கிரைண்டர் ஆர்டர்' கிடைக்கும் என்பதால், இப்பொழுது இருந்தே கோவை தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். தொழிற்சாலை நடத்துபவர்கள் அனைவரும் இணைந்து, டெண்டர் எடுப்பது, பின், டெண்டர் பகிர்ந்து, கிரைண்டர் தயாரிப்பது என்ற முடிவில் உள்ளனர். அதிகளவில் ஆர்டர் கிடைத்தால், புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி கிரைண்டர் தயாரிப்பது, விலையையும் கணிசமாகக் குறைப்பது என்று தயாரிப்பாளர்கள் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.ஒரு பக்கம் சில தயாரிப்பாளர்கள் ஆவலாகக் காத்திருந்தாலும், வேறு சில தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு ஒரு கிரைண்டர் தான் வைத்து கொள்ள முடியும். "டிவி' என்றால் இரண்டு வைத்துக் கொள்ளலாம். அரசின் இலக்கு அடைந்தவுடன், கிரைண்டர் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்படுகின்றனர். ஒரு சிலர், கிரைண்டர் தயாரிப்பிற்கு, டீலர்களிடம், "ஆர்டர்' கொடுத்து, பணமும் கொடுத்து விட்டனர்."டிவி'யின் விலை அதிகம். ஆனால், கிரைண்டர், மிக்சி, மின் விசிறி விலை குறைவு. மொத்தமாக அதிகளவில் வாங்கும் போது, இவற்றை மார்க்கெட் விலையை விட குறைவான விலைக்கு வாங்கலாம். அதிகளவில் செலவு இருக்காது.மொத்தமாக தயாரிப்பாளர்களிடம் அரசாங்கம் வாங்க முயற்சிக்கும் போது, சில்லரை விற்பனையாளர்களின் விற்பனை முடங்கும். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என தெரியவில்லை.

-நமது சிறப்பு நிருபர்-

No comments:

Post a Comment