|
Thursday, 31 March 2011
வாழைத் தண்டு,வாழைப் பூ மருத்துவ பண்புகள்
லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன. அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய்க் கடந்த 19-ஆம் தேதி நேட்டோ நாடுகளின் நாசகாரிக் கப்பல்களில் இருந்து லிபியாவை நோக்கி நூற்றுக்கணக்கான தொமொஹாக் ஏவுகணைகள் பறந்து சென்றன. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் – 2003-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி – இதே போன்றதொரு மனிதாபிமானத்தின் செய்தியை ஈராக்கியர்களுக்குச் சொன்னான் வெள்ளைத் தோல் ஒபாமாவான ஜார்ஜ் புஷ். லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போயும், உடல் உறுப்புக்களை இழந்தும் கூட இன்று வரை பணியாமல் நின்று புதைகுழி என்பது எப்படியிருக்கும் என்று அமெரிக்கர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்கள் பண்டைய பாபிலோனியாவின் வீரம் செரிந்த அந்த மக்கள். அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும்!இலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் ஆவி அடங்கும் முன்பாகவே கருப்புத் தோல் ஜார்ஜ் புஷ்ஷான ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார். இந்தப் போரில் அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல்களும், எப்-16 விமானங்களும், தொமொஹாக் ஏவுகணைகளும் என்னென்ன வேலைகளைச் செய்யுமோ அதே வேலைகளை சர்வதேச அளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் செய்து வருகின்றன. கடாஃபியை எதிர்த்து நடந்து வரும் மக்கள் புரட்சியை அவர் கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டு ஒடுக்கி வருவதாகவும், மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று வருவதாகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கடந்த சில வாரங்களாகவே மிகத் தீவிரமாக உலகெங்கும் பரப்பி வருகின்றன. முதலில் இப்போது லிபியாவில் கடாஃபிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பது பிற அரபு நாடுகளில் உண்டான எதிர்ப்பில் இருந்து சாராம்சத்திலேயே வேறுபட்டது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், ‘வண்ணப் புரட்சிகள்’ என்று மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அரபு தேசங்களில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளுக்கும் லிபியாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்வது அவசியம். மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளம் அறியப்பட்ட துவக்க ஆண்டுகளிலேயே அந்நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் போட்டியின்றி அதன் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ளவும் ஏகாதிபத்திய நாடுகளிடையே நாய்ச்சண்டை ஆரம்பித்து விட்டது. ஐம்பதுகளுக்குப் பின் இரண்டாம் உலகப் போரினால் கடுமையாக பலவீனமடைந்திருந்த பிற ஏகாதிபத்தியங்களைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுத்திருந்ததால், இப்பிராந்தியத்தின் அரபு தேசங்களை மற்றவர்களுக்கு முன் முந்திக்கொண்டு சுலபமாக வளைத்துக் கொண்டது. மத்திய கிழக்கின் பெரும்பாலான அரபு தேசங்களில் பெயரளவுக்கு ஒரு பொம்மை சர்வாதிகாரியை வைத்துக் கொண்டு அவற்றை தமது மறைமுகக் காலனிகளாக கட்டியாள்கிறது அமெரிக்கா. வளைகுடா எண்ணை வர்த்தகம் முழுவதையும் கட்டுப்படுத்துவது ஆங்கிலோ அமெரிக்கப் பன்னாட்டு எண்ணைக் கம்பெனிகள் தாம். இந்நிலையில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீப வருடங்களாக உலகெங்கும் ஒரு பொதுப் போக்காக இருக்கும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் மக்களிடையே சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்புணர்வு உருவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தும் சிறியதும் பெரியதுமான போராட்டங்களாக முளைவிடத் துவங்கியது. பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இப்போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து வந்த நிலையில், இதன் காரணமாக தனது மேலாதிக்கத்திற்கு எந்தவிதமான சவாலும் உருவெடுத்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது. தொடர்ந்த போராட்டங்களின் மைய்யமாக மக்களை வாட்டி வதைக்கு மறுகாலனியாதிக்கத்திற்கான எதிர்ப்பாக இல்லாமல், ஜனநாயகம், பலகட்சி ஆட்சி முறை போன்ற சில சில்லறை முதலாளித்துவச் சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சுற்றியே அமைந்தது. இது எதார்த்தத்தில் வெறுமனே சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே சுருங்கிப் போனது. அதாவது வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு முதலான பிரச்சினை காரணமாக எழுந்த எதிர்ப்புணர்வு பின்னர் வெறும் ஆட்சியாளரை மாற்றும் போராட்டமாக மட்டும் மாறிப்போனது. இந்த போராட்டங்களில் உழைக்கும் மக்கள் வெகுவாக அணிதிரண்டாலும் அவர்களை வழிநடத்தியது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அறிவுஜீவிகள்தான். எகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்டிருக்கும் ‘மாற்றம்’ வெறுமனே ஆட்சியாளர்களின் பெயர் மாற்றம் மட்டும் தான் – பென் அலிக்கு பதிலாக பதவிக்கு வந்துள்ள முகம்மது கன்னோசி ஆகட்டும்; எகிப்தில் முபாரக்கை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமாகட்டும் – இவர்களுக்குள் கொள்கையளவில் எந்த வேறுபாடும் கிடையாது. துனீசியாவின் முகம்மது கன்னோசியும் அவரது கூட்டாளிகளும் இவர்களைத் தாங்கி நிற்கும் இராணுவமும் அமெரிக்க அடிவருடிகள் தான். அதே போல் எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமும் அமெரிக்க ஆதரவு இராணுவம் தான். இந்நாடுகளில் தன்னெழுச்சியாகத் துவங்கிய மக்கள் போராட்டங்களின் திசைவழி இன்னதென்பதை அமெரிக்காவே தீர்மானிப்பதாகவே அமைந்தது. இப்படியாக, எகிப்து மற்றும் துனீசியாவில் நடந்த மக்கள் எழுச்சி ஆயுதம் தாங்கிய போராட்டமாக அல்லாமல் அமைதியான வழியிலேயே நடத்தப்பட்டன. மேலும், போராட்டக்காரர்களுக்கு அயல் நாடுகளில் இருந்து ஆயுத உதவியோ இராணுவ உதவியோ வழங்கப்படவில்லை. எகிப்தின் பல்வேறு நகரங்களின் கட்டுப்பாடுகளை முபாரக் இழந்து கொண்டிருந்த சமயத்தில் பிற நாடுகள் எதுவும் போராட்டக்காரர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமது தூதர்களை அனுப்பி வைக்கவில்லை, இப்போது பஹ்ரைனில் அரச எதிர்ப்பாளர்களை இராணுவம் மிருகத்தனமாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கவில்லை – ஆனால், இது அனைத்தும் லிபியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மட்டுமல்லாமல், லிபியாவில் கடாஃபியை எதிர்த்த போராட்டங்கள் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே அதன் மீது இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கான தயாரிப்புகளில் அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஈடுபட்டிருந்தன. லிபியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கான போராட்டமா? அமெரிக்காவின் ஐந்தாம் படை வேலையா?மக்களுக்கான ஜனநாயகத்தை கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக முவாம்மர் கடாஃபி மறுத்து வந்ததும், தனக்கு எதிரான போராட்டங்களை அவர் ஒடுக்கி வந்ததும், இவற்றின் காரணமாக லிபியாவில் ஜனநாயகத்திற்கான கோரிக்கை இருந்து வந்ததும் எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை தான் இன்று மேற்கத்திய ஊடகங்களால் ஜனநாயகத்தைக் காக்க வந்த ‘புரட்சியாளர்கள்’ என்பது போல சித்தரிக்கப்படும் போராட்டக்காரர்கள் உண்மையில் அமெரிக்கத் தயாரிப்புகள் என்பதும். லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவித்துள்ளார். லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர். அதற்கும் முன்பாக சென்ற வருட அக்டோபர் மாத வாக்கிலேயே லிபியாவோடு எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான் மற்றும் ஓக்ஸிடென்டல் பெட்ரோலியம் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் எண்ணை துரப்பணத்திற்காகவும் புதிய எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் பெற்றிருந்த லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை. அப்போதே ரசிய ஊடகங்கள் லிபியாவின் மேல் மேற்கத்திய நாடுகள் இராணுவ நடவடிக்கை ஒன்றைத் துவங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி எழுதத் துவங்கிவிட்டன. லிபியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் எகிப்தின் வழியே நவீன ஆயுதங்களும் வெடி பொருட்களும் கடந்த மாதத் துவக்கத்திலிருந்தே போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. யுகோஸ்லோவிய விவகாரத்தில் கையாண்ட அதே போன்ற தந்திரத்தை லிபியாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி விடலாம் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் கடாஃபியின் இராணுவம் தொடுத்த எதிர்த் தாக்குதல்கள் ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது. மார்ச் 4-ஆம் தேதி துவங்கிய லிபிய இராணுவ நடவடிக்கையின் விளைவாய் கலக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியமான நகரங்களை இராணுவம் மீண்டும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. உடனடியாக தனது ஊதுகுழலாக செயல்படும் சர்வதேச ஊடகங்கள் மூலம் லிபியாவில் படுபயங்கரமான இனப்படுகொலை நடப்பதாக பீதியூட்டும் பிரச்சாரங்களை அமெரிக்கா கட்டவிழ்த்து விடுகிறது. இதன் மூலம், லிபியாவில் நடந்து கொண்டிருப்பது துனீசியா, எகிப்து போன்ற அமைதி வழிப் போராட்டம் என்பது போன்றும் அதை கடாஃபி ஆயுதம் கொண்டு கொடூரமாக ஒடுக்குகிறார் என்பது போன்றும் ஒரு சித்திரம் திட்டமிட்ட ரீதியில் கட்டமைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து “மனிதாபிமானத்தின்” அடிப்படையில் தாம் லிபிய விவகாரத்தில் தலையிடுவதாகச் சொல்லிக் கொண்டு மார்ச் 19-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து விமானத் தாக்குதலையும் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது. பொதுவில் நீண்ட நாட்களாக மக்களுக்கான ஜனநாயகத்தை கடாஃபி மறுத்து வந்துள்ளார். மொத்த நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அவரது குடும்பமே கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் உள்ள சர்வாதிகாரிகளுக்கும் மன்னர்களுக்கும் கடாஃபிக்கும் இந்த அம்சங்களில் பெரும் ஒற்றுமை இருந்தது உண்மை தான். ஆனால், அடிப்படையில் வேறு ஒரு முக்கியமான அம்சத்தில் கடாஃபி மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டார் – அது தன் தேசத்தின் வளங்களை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்காமல் இருந்தது தான். ஜனநாயகக் கோரிக்கை லிபியாவில் ஓரளவுக்கு இருந்து வந்தது என்பதும், மக்களில் ஒரு பிரிவினர் கடாஃபியின் மேலான நம்பிக்கையை இழந்திருந்தனர் என்பதும் உண்மை தான். ஆனால், துனீசியா, எகிப்து உள்ளிட்ட அரபு தேசங்கள் போல் அல்லாது லிபியாவில் பெருமளவிலான மக்கள் போராட்டங்களோ எதிர்ப்புகளோ உருவாகிவிடவில்லை. ஆக, தற்போது லிபியாவின் ‘ஜனநாயகத்துக்காகப்’ போராடிவரும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணியின்’ (National Front for the salvation of Libya) வரலாறு என்னவென்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. அதிலும் மிகக் குறிப்பாக லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தை ஏகாதிபத்திய நாடுகள் உடனடியாகப் பிரித்து எதிர்ப்பாளர்களை அங்கீகரிக்க காட்டிவரும் அக்கறையும் கவனத்திற்குரியது. 1983-ஆம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ மற்றும் யு.எஸ்.எய்ட் ஆகிய அமைப்புகளின் நேரடி ஏற்பாட்டில் ‘ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை’ (National Endowment for Democracy) எனும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இராணுவ பலத்தோடு ஜனநாயகத்தை உருவாக்க முடியாத பிராந்தியங்களில் செயல்படுவதற்கென்று உருவாக்கப் பட்ட இவ்வமைப்பின் நோக்கம் – தமக்கு ஒத்துவராத சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில் ஊடுறுவி, மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை விதைப்பதே. அவ்வகையில் இவ்வமைப்பு எண்பதுகளில் இருந்தே லிபியர்கள் மத்தியில் ஒரு நீண்ட கால நோக்குடன் கடாஃபிக்கு எதிரான வேலைகளை ஆரம்பித்திருந்தது. மேற்படி அமைப்பின் தீவிர ஆசியைப் பெற்றது தான் தற்போது அப்பாவிப் புரட்சியாளர்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் போற்றிப் புகழும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணி’. இந்த அப்பாவிகள் தமது பிறப்பிலேயே அமெரிக்க அடிவருடித்தனத்தைக் கொண்டிருந்தனர். 1981-ஆம் ஆண்டு சூடானின் அமெரிக்கக் பொம்மை சர்வாதிகாரியாக இருந்த கலோனல் ஜாஃபர் நிமிரியின் முன்னிலையில் தான் இந்த அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத் துறைகளின் ஏற்பாட்டில் 2005-ஆம் ஆண்டு லண்டனிலும் பின்னர் ஜூலை 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது. கடாபியின் சரணடைவும், தேசிய எண்ணைய் நிறுவனமும்இதில் மிகவும் கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின், தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தன் எதிரி நாடுகளை வேட்டையாட அமெரிக்கா துவங்கியிருந்த ஆரம்ப நாட்களில் லிபியாவையும் தீமைக்கான அச்சு நாடுகள் பட்டியலில் சேர்த்திருந்தது. ஆப்கான், ஈராக்கைத் தொடர்ந்து தனது கொலைப் பட்டியலில் ஈரானையும் லிபியாவையுமே வைத்திருந்த நிலையில், வேறு நாடுகளின் ஆதரவு இல்லாத நெருக்கடியில் கடாஃபி தன்னிச்சையாக அமெரிக்க ஆதரவு நிலையை எடுக்கத் தள்ளப்படுகிறார். அவரே சுயமாக முன்வந்து தமது நாட்டின் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவதாக அறிவித்ததோடு அல்லாமல், அது தொடர்பாக லிபியா சேகரித்து வைத்திருந்த தொழில்நுட்ப விபரங்களையும் கருவிகளையும் ஒப்படைக்கவும் செய்கிறார். மட்டுமல்லாமல், அல்குவைதா அமைப்பைப் பற்றிய மிக முக்கியமான உளவுத் தகவலையும், அணு ஆயுதக் கள்ளச் சந்தை பற்றிய உளவுத் தகவல்களையும் கூட அமெரிக்க உளவுத் துறைக்கு கையளிக்கிறார். அதைத் தொடர்ந்து லிபியா திருந்தி விட்டதாக ஞானஸ்நானம் அளிக்கும் அமெரிக்கா, அதன் மேல் இருந்த பொருளாதாரத் தடைகளையும் 2004-ஆம் ஆண்டே விலக்குகிறது. கடாஃபியும் தனது படை பரிவாரங்களோடு ஐரோப்பிய தேசங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் – கடாஃபியின் பில்லியன் கணக்கான பெட்ரோ டாலர்கள் அமெரிக்காவின் நிதிமூலதனச் சூதாடிகளான ஜே.பி.மார்கன் மற்றும் சிட்டி குரூப்பில் முதலீடு செய்யப்படுகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான எக்ஸான்மொபில், ஹாலிபர்ட்டன், செவ்ரான், கொனாகோ மாரத்தான் ஆயில் போன்ற பெட்ரோலிய நிறுவனங்களும், ரேய்த்தியன் நார்த்ராப், க்ரம்மன் போன்ற ஆயுதக் கம்பெனிகளும் டவ் கெமிக்கல்ஸ் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளும் அமெரிக்க லிபிய பொருளாதார மேம்பாட்டுகென அமைப்பு ஒன்றையும் (USLBA) 2005-ஆம் ஆண்டு துவங்குகிறார்கள். ஆக, தெளிவாக ஒரு மேற்கத்திய ஆதரவு நிலையை கடாஃபி எடுத்த பின் இந்தப் போருக்கான தேவை ஏன் எழுந்தது? ஒரு பக்கம் கடாஃபியோடு உறவாடி வந்த நிலையில், இன்னொரு பக்கம் அவரின் எதிர்ப்பாளர்களை அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஏன் வளர்த்து விட வேண்டும்? லிபியர்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்பதை விரல் சூப்பும் குழந்தை கூட ஒப்புக் கொள்ளாது. அப்படி ஜனநாயகத்தின் மேல் உண்மையில் அமெரிக்காவுக்கு காதல் இருக்குமானால், டொமஹாக்கின் முதல் இலக்கு பஹ்ரைனாகவோ சவூதியாகவோ தான் இருந்திருக்க முடியும். அமெரிக்க ஆக்கிரமிப்பு ஜனநாயகத்திற்கா, எண்ணெய் வளத்தை கைப்பற்றவா?அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான். லிபியாவின் பெட்ரோல் வர்த்தகத்தில் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் அது இன்று வரையில் முழுமையாக தனியார்மயமாக்கப் படவில்லை. தேசிய பெட்ரோலிய கார்ப்பொரேஷன் எனும் அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் தான் லிபியாவின் எண்ணை வளம் இருந்து வருகிறது. அதோடு கூட்டு ஒப்பந்தங்கள் வழியாகத் தான் அமெரிக்க நிறுவனங்கள் பெட்ரோல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது. தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி, லிபியாவில் 60 பில்லியன் பேரல் எண்ணை ரிசர்வாக உள்ளது. உலகின் மொத்த எண்ணை மற்றும் எரிவாயு ரிசர்வுகளில் 3.34% லிபியாவில் இருக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய எண்ணை நிறுவனங்கள் லிபியாவின் தேசிய எண்ணை கார்பொரேஷனுடன் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும், சீனாவின் தேசிய பெட்ரோலிய கார்பொரேஷனும் லிபியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.எண்ணை துரப்பணம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக சுமார் 30,000 சீனத் தொழிலாளிகள் லிபியாவில் உள்ளனர். லிபியா மட்டுமல்லாமல், சீனா பிற ஆப்ரிக்க தேசங்களிலும் கனிமங்கள், பெட்ரோல் போன்ற இயற்கை வளங்களின் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு போட்டியாக உருவெடுத்து வருகிறது. இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் லிபியா போர் என்பது நேரடி ஆக்கிரமிப்பு என்பதையும் கடந்த ஒன்றாகும். வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்காசிய மற்றும் மத்திய ஆசியப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக, உலகின் 60% எண்ணை ரிசர்வைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் விரிவான திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் லிபியப் போர். தற்போது லிபியாவின் ஜனநாயகப் ‘போராளிகள்’ முக்கியமாகக் கட்டுப்படுத்தும் பிரதேசங்கள் கடாஃபியால் 1969-இல் பதவியிறக்கப்பட்ட முன்னாள் மன்னருக்கு ஆதரவானவர்கள் நிறைந்த பிரதேசம் என்பதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணை வயல்களும் எரிவாயுக் குழாய்களும் கொண்ட பகுதி என்பது தற்செயலானதல்ல. மட்டுமல்லாமல், கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியத்தை அங்கீகரித்து, சட்டப்பூர்வமானதாக அறிவிக்கவும் மேற்கத்திய நாடுகள் முயன்று வருகின்றன. அமெரிக்காவின் உலக மேலாதிக்கக் கனவுகள் நிறைவேறத் தேவையென்றால் எந்த நாட்டின் மேலும் எப்போது வேண்டுமானாலும் தனது இராணுவத்தை ஏவி விடலாம் என்கிற ஒரு எதார்த்தத்தை ஈராக் யுத்தத்திற்குப் பின் அமெரிக்கா நிலைநாட்டியுள்ளது. இறையாண்மை, தேசம், தேச எல்லைகளின் புனிதம் என்றெல்லாம் பேசியது மெல்ல மெல்லப் பழங்கதையாகி வருகிறது. லிபியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டவோ, அதற்காக அதன் மேல் தாக்குதல் தொடுக்கவோ அமெரிக்காவுக்கு இருக்கும் உரிமை குறித்து உலக நாடுகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் லேசான முணுமுணுப்புகளோடு ஒப்புக் கொள்ளும் அடிமை மனநிலைக்கு வந்து விட்டன. ஒரு வேளை லிபியாவின் அரச படைகளை தங்கள் ஆதரவையும் ஆயுதத்தையும் பெற்ற ‘புரட்சியாளர்கள்’ வென்று முழு லிபியாவையும் கைப்பற்ற இயலாது போனால், குறைந்தபட்சம் அவர்கள் வசமிருக்கும் எண்ணை வயல்கள் மிகுதியாகக் கொண்ட பிரதேசத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் லிபியாவின் எல்லைக் கோடுகளை திருத்தி வரையும் முயற்சியிலும் மேற்கத்திய நாடுகள் இறங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் லிபியாவின் மேல் நேட்டோ படைகளின் தாக்குதலுக்குக்கு ஒப்புதல் பெறும் வாக்கெடுப்பில் தீர்மானத்தை எதிர்த்து வாக்காளிக்காமல் புறக்கணித்த இந்தியா பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்றால், ஜெர்மனிக்கு லிபியாவோடு கடந்த நவம்பரில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை பற்றித் தான் கவலை. மற்றபடி, இரசியா சீனா உள்ளிட்ட பிற நாடுகளும் கூட, லிபிய விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க உரிமை குறித்து கேள்வியெழுப்பவில்லை. ஒரு உலக ரவுடியாக உருவெடுத்துள்ள அமெரிக்கா, தன்னைத் தானே உலகப் போலீசாகவும் நியமித்துக் கொண்டுள்ளது. யேமனிலும், பஹ்ரெய்னிலும், சவூதியிலும் நடந்து வரும் அரச எதிர்ப்பு / சர்வாதிகார எதிர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் அமெரிக்க ஆதரவு பெற்ற அடிவருடிக் கும்பல்கள் மிருகத்தனமாக ஒடுக்கிவரும் நிலையில், லிபியாவின் மேல் அமெரிக்கா அக்கறை கொள்வதன் உண்மையான நோக்கம் ஜனநாயகம் அல்ல – அது எண்ணையும் இயற்கை வளங்களும் தான். அமெரிக்க ஆக்கிரமிப்பின் செலவு உங்கள் தலையில்!ஒவ்வொரு முறை பெட்ரோலிய நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போதும் உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியின் செலவு மறைமுகமாக உலக மக்கள் அனைவரின் தலைமேல் தான் சுமத்தப்படுகிறது. மறைமுகமாக நம்முடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு ஈராக்கியனின் உயிருக்கும், லிபியனின் உயிருக்கும், ஆப்கானியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது. நம்மை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நமது நாட்டோடும் ஆட்சியாளர்களோடும் மட்டுமே தொடர்புடைய ஒன்றல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போர்களின் ‘நன்மைகளை’ ஏகாதிபத்தியங்களும் அதன் பன்னாட்டுக் கம்பெனிகளும் அறுவடை செய்து கொள்ளும் அதே வேளையில் அதன் சுமை உலகம் மொத்தமும் உள்ள உழைக்கும் மக்களின் தலையில் தான் சுமத்தப்படுகிறது. அன்று கொஸாவாவிலும், நேற்று ஈராக்கிலும் ஆப்கானிலும், இன்று லிபியாவிலும் வெடித்துச் சிதறும் டொமஹாக் ஏவுகணைகளின் நேரடி இலக்குகளாக அந்த நாடுகளின் அப்பாவி மக்கள் இருந்தார்கள் என்றால் அதன் மறைமுக இலக்கு நாம் தான். எனவே, இது எங்கோ அப்ரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் லிபியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. நம்முடைய பிரச்சினையும் தான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் கடமை ஈராக்கியர்களோடும் ஆப்கானியர்களோடும் லிபியர்களோடும் மட்டும் முடிந்து விடுவதல்ல – அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட. ______________________________________________________________ |
--
Major earthquakes throughout history in pictures
Major earthquakes throughout history in pictures
![]() |
Major earthquakes throughout history in pictures. Statistics from The Geological Society of London.
1906: USA (California, San Francisco). Richter scale: 7.8, Deaths: 3,000, Cost ($m): 524
![]() |
1908: Italy (Messina). Richter scale: 7.5, Deaths: 25,926, Cost: ($m) 116
![]() |
1923: Japan (Tokyo-Yokohama). Richter scale: 8.3, Deaths: 142,800, Cost ($m): 2,800
![]() |
1936: Pakistan (Quetta). Richter scale: 7.5, Deaths: 35,000, Cost ($m): 25
![]() |
1939: Chile (Concepcion). Richter scale: 8.3, Deaths: 28,000, Cost ($m): 100
![]() |
1939: Turkey (Erzincan). Richter scale: 8.0, Deaths: 36,740, Cost ($m): 20
![]() |
1960: Morocco (Agadir). Richter scale: 5.9, Deaths: 12,000, Cost ($m): 120
![]() |
1970: Peru (Chimbote). Richter scale: 7.7, Deaths: 67,000, Cost ($m): 550
![]() |
1976: China (Tangshan). Richter scale: 8.0, Deaths: 290,000, Cost ($m): 5,600
![]() |
1976: Guatemala (Guatemala City). Richter scale: 7.5, Deaths: 22,084, Cost ($m): 1,100
![]() |
1985: Mexico (Mexico City). Richter scale: 8.1, Deaths: 10,000, Cost ($m): 4,000
![]() |
1988: Armenia (Spitak). Richter scale: 6.9, Deaths: 25,000 Cost ($m): 14,000
![]() |
1989: USA (California, San Francisco). Richter Scale: 7.0, Deaths: 68, Cost ($m): 6,000

July 1990, Baguio City, Philippines. Deaths about 5000.
![]() |
1995: Japan (Kobe). Richter scale: 7.2, Deaths: 6348, Cost ($m): 200,000
![]() |
1999: Turkey (Kocaeli). Richter scale: 7.4, Deaths: 19,118, Cost ($m): 20,000
![]() |
2004: Indian Ocean earthquake and tsunami. Richter scale: 9.2, Deaths: 230,000
![]() |
2008: Sichuan Province. Richter scale: 8.0, Deaths: 68,000, Cost ($m): 20,000
![]() |
2010: Chile (Maule Region). Richter scale: 8.8, Deaths: 486
![]() |
2011: Japan. Richter scale: 8.9.
குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க TANCET நுழைவு தேர்வு
குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க TANCET நுழைவு தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழககங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுத்கீடு உள்ளது.
பெரும்பாலும் மாணவர்கள் பட்ட படிப்பை முடித்தவுடனே MBA, M.E/ M.Tech , MCA படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்க்கு பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வழியுறுத்துங்கள், இந்த தேர்வை எழுதி தேர்சி பெறுமாரு கூறுங்கள். இந்த மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். நல்ல கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும்.
மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
தேர்வை பற்றிய விபரங்கள் (அட்டாச்மென்டில் முழு விபரமும் உள்ளது)
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தமிழகத்தில் உள்ள எல்லா அண்ணா பல்கலை கழகங்கள், மற்றும் மாவட்ட வாரியாக கிடைக்கும் இடங்களின் விபரம் அட்டாச்மென்டில் உள்ளதுஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய : www.annauniv.edu/tancet2011 (ஏப்ரல் - 1 முதல் ஏப்ரல் 25 வரை இன்ஷா அல்லாஹ்)
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 27/04/2011 (இன்ஷா அல்லாஹ்)
தேர்வு கட்டணம் : ரூ.300
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Secretary, TANCET Examination Centre, Anna University, Chennai - 600 025.
உடனடி விண்ணப்பம் (Spot Registration): தமிழகத்தில் உள்ள எல்லா அண்ணா பல்கலை கழங்களில் விண்ணப்பம் பெற்று உடனடியாக ஹால் டிக்கெட் (Hall Ticket ) பெறலாம். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, சாதி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதிகள் :
M.E/M.Tech - 29/05/2011 (காலை )
MBA - 28/05/2011 ( காலை )
MCA - 28/05/2011 (மாலை)
M.Arch/M.Plan - 29/05/2011 (காலை )
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : ஜூன் 3-வது வாரம் இன்ஷா அல்லாஹ்
M.E/M.Tech படிக்க தகுதிகள் : B.E/B.Tech படித்தவர்கள், A.I.M.E, B.Pharm படித்தவர்கள். M.Sc. (physics/chemistry/Maths/Geography/Geology/Electronics etc....) படித்தவர்கள். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
MBA படிக்க தகுதிகள் : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
MCA படிக்க தகுதிகள் : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள். (+2 - ல் கணித பிரிவில் படித்து இருக்க வேண்டும், அல்லது பட்ட படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் படித்து இருக்க வேண்டும்). இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
M.Arch/M.Plan படிக்க தகுதிகள் : B.Arch அல்லது B.Plan படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வை பற்றிய முழுவிபரங்களும் இந்த www.annauniv.edu/tancet2011 இணையதளத்தில் உள்ளது. மேலும் விபரங்கள் அறியவும், தேர்வை பற்றிய சந்தேகங்களுக்கும், தேர்விற்க்கு தயாரரும் வழிமுறைகள் பற்றி அறியவும் sithiqu.mtech@gmail.com என்ற E - மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
S.சித்தீக்.M.Tech
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?
தமிழ்நாட்டின் தேர்தல் தலை விதியை நிர்ணயிப்பதே இலவசங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி என்று தொடங்கி, மடிக்கணினி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை முழங்க, உன்னை விட நான் விஞ்சுகிறேன் பார் என்ற ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆடு, மாடு எல்லாம் கூட இலவசம் என்று அறிவித்துள்ளது.
| FILE |
ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்து விவரம் தெரிந்த வாக்காளர்கள் சிரிக்க, மற்றொரு பக்கமோ என்னைப் பார்த்து நீ காப்பியடிக்கிறாய், உன்னால் என்னைப்போல் தர முடியாது என்று இன்னாள் முதல்வர் கூட்டத்திற்குக் கூட்டம் முழங்குகிறார். பெரிதாக அறிவித்தாலும், அதை மையப்படுத்தாமல், தி.மு.க.விற்கு எங்கு வலிக்குமோ அங்கே பார்த்து குத்துகிறார் முன்னாள் முதல்வர். 2ஜி ஊழல், குடும்ப ஆட்சி, அரசியல், சினிமாத்துறை ஆக்கிரமிப்பு ஆகியனதான் இத்தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன என்கிறார் ஜெயலலிதா.
ஆனால், தி.மு.க. கூட்டணியின் இரண்டாவது பெரிய பிரச்சார பீரங்கியான துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், செய்ததைச் சொல்லி கலைஞர் வாக்கு கேட்கிறார், செய்ய முடியாததைச் சொல்லி ஜெயலலிதா வாக்கு கேட்கிறார் என்று பேசி வருகிறார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, சொல்லாமல் இன்னும் எத்தனையோ செய்ய கலைஞர் திட்டம் வைத்துள்ளார் என்று போகிற இடமெல்லாம் முழங்குகின்றனர் தி.மு.க. முன்னணித் தலைவர்கள்.
இலவசங்களை வழங்குவது உள்ளபடியே ஒரு ஆட்சியின் சாதனைதானா? என்கிற வினாவிற்கு விடை காண முற்பட்டபோது, இதற்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை விடைகாண புறப்பட்டபோது, இலவசங்களுக்கான செலவீனங்களுக்கு நிதி ஆதாரம் எது என்பதை அறிந்தபோது, ‘கொடுப்பவர்கள் மறைந்திருக்க, தருபவர் பெருமை கொள்கிறாரே’ என்றே சொல்லத் தோன்றுகிறது.
எடுத்துக்காட்டாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் சமர்ப்பித்த 2011-12ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் இலவச மற்றும் நல்வாழ்வுத் திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் பார்ப்போம்.
1. ரூ.1க்கு வழங்கப்படும் அரிசித் திட்டத்திற்கு - ரூ.3,750 கோடி.
2. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் - ரூ.295 கோடி
3. கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் - ரூ.750 கோடி
4. இலவச மருத்துவ ஊர்த்திச் சேவை - ரூ.75 கோடி
5. வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்க - ரூ.500 கோடி
6. கலைஞர் வீட்டு வசதித் திட்டம் - ரூ.262.50 கோடி
7. நிரந்தர வீடு கட்டித்தரும் திட்டம் - ரூ.1,800 கோடி
8. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - ரூ.508 கோடி
9. ஊரக குடி நீர் திட்டங்களுக்கு - ரூ.1,183 கோடி
10. ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (மாநில அரசின் பங்கு) - ரூ.250 கோடி
பெரியார் சமத்துவ புரம் திட்டம் - ரூ.75 கோடி
11. வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் - ரூ.184 கோடி
12. திருமண நிதியுதவித் திட்டம் - ரூ.300 கோடி
13. கருவுற்றத் தாய்மார்கள் உதவித் தொகை வழங்கும் திட்டம் - ரூ.360 கோடி
14. சமையல் எரிவாயு அடுப்பு வழங்க - ரூ.140 கோடி
15. சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க - ரூ.124 கோடி
16. குழந்தை வளர்ச்சித் திட்டம் - ரூ.891 கோடி
17. எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - ரூ.924 கோடி
18. முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகைக்கு - ரூ.1,002 கோடி
19. பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன் - ரூ.459 கோடி
20. தாழ்த்தப்பட்டோர் கல்வி உதவி நிதித் திட்டம்-ரூ.198 கோடி
21. ஆதி திராவிடர் நல வாழ்வுத் திட்டங்களுக்கு - ரூ.894 கோடி
22. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க - ரூ.78 கோடி
23. அமைப்பு சாரா தொழிலாளர் நலன் - ரூ.50 கோடி
24. வேலையற்றோர் உதவி நிதித் திட்டம் - ரூ.60 கோடி
25. ஈழத் தமிழர் மறுவாழ்விற்கு - ரூ.100 கோடி.
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத் திட்டங்கள் என்று கூறப்பட்ட திட்டங்களே மேற்கூறப்பட்டுள்ளவையாகும். இவற்றிற்கான நிதி ஒதுக்கீடு அனைத்தையுன் கூட்டிப் பார்த்தால் அது ரூ.15,110.50 கோடி வருகிறது. இது மேற்கண்ட திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில், அதாவது 2011-12இல் செலவிட ஒதுக்கப்பட்ட நிதிகளாகும்.
இவ்வளவு பெரிய நிதிச் செலவை எங்கிருந்து பெற்று தமிழக அரசு ஈடுகட்டுகிறது? தமிழக அரசின் ஒட்டுமொத்த வரி வருவாய் இந்த நிதியாண்டில், அதாவது 2010-11 நிதியாண்டில் ரூ.63,091.74 கோடியாகும். இதில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைத்த வருவாய் உத்தேசமாக - ஆண்டு முடிவிற்கு இன்னமும் 5 நாட்கள் உள்ளதால் சரியான புள்ளி விவரம் வெளியாகவில்லை - ரூ.14,600 கோடி!
இலவசம், மக்கள் நல் வாழ்வு, மருத்துவம், கலர் டி.வி., சமையல் எரிவாயு இணைப்பு, இலவச அரிசி ஆகியன மட்டுமின்றி, தி.மு.க. அரசின் அனைத்து சமூக நலத் திட்டங்களுக்குமான நிதியை அது டாஸ்மாக் மது விற்பனை மூலம் பெற்றுவிடுகிறது என்பதே உண்மை.
FILE
2010-11 ஆம் ஆண்டில், மது உற்பத்தியின் மூலம் தமிழக அரசிற்கு கிடைத்த வருவாய் (Excise Duty) ரூ.6,733.90 கோடி. மது விற்பனையில் கிடைத்த விற்பனை வரி (Sales Tax) ரூ.5,757.63 கோடி. ஆக மொத்தம் அரசிற்கு மதுவின் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.12,491.53 கோடி.
2002 -2003 நிதியாண்டில் இருந்து (அதாவது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்து) 2010-11ஆம் நிதியாண்டு வரை மது விற்பனை மூலம் தமிழக அரசு பெற்றுள்ள மொத்த வருவாய் ரூ.56,639 கோடி! இதோடு நடப்பு நிதியாண்டில் வரும் வருவாயையும் சேர்த்தால் ரூ.71,000 கோடி ஆகும்!. மது விற்பனை மூலம் இந்த 9 ஆண்டுகளில் கிடைத்துவரும் இந்த வருவாயைக் கொண்டுதான் சத்துணவு முதல் கலர் டி.வி. வரை வழங்கப்படு்கிறது.
ஆண்டு வாரியாக மது விற்பனை வருவாய் விவரம் :
2002 - 2003 நிதியாண்டில் ரூ.2,828.09 கோடி -
2003 - 2004 நிதியாண்டில் ரூ.3,639.00 கோடி - 28.67 விழுக்காடு உயர்வு
2004 - 2005 நிதியாண்டில் ரூ.4,872.00 கோடி - 33.88 விழுக்காடு உயர்வு
2005 - 2006 நிதியாண்டில் ரூ.6,086.95 கோடி - 24.94 விழுக்காடு உயர்வு
2006 - 2007 நிதியாண்டில் ரூ.7,300.00 கோடி - 19.95 விழுக்காடு உயர்வு
2007 - 2008 நிதியாண்டில் ரூ.8,822.00 கோடி - 20.85 விழுக்காடு உயர்வு
2008 - 2009 நிதியாண்டில் ரூ.10,601.50 கோடி - 20.17 விழுக்காடு உயர்வு
2009 - 2010 நிதியாண்டில் ரூ.12,491.00 கோடி - 17.82 விழுக்காடு உயர்வு
2010 - 2011 நிதியாண்டில் ரூ.14,033.00 கோடி - உத்தேசமாக
இப்போது அறிவிக்கப்பட்ட கூடுதல் இலவசங்களால் இந்த செலவீனம் கொஞ்சம் அதிகரிக்கும். அதற்கேற்றாற்போல் மது விற்பனையும் (ஆண்டுக்கு 20 விழுக்காடு) அதிகரிக்கும் அல்லவா? அந்த வரி வருவாய் இந்தச் செலவு உயர்வை சரிகட்டிவிடும்.
2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவி கேள்வி எழுப்பிய போது, அயல்நாட்டு மதுபான உற்பத்தியின் மீது விதிக்கப்படும் தீர்வையின் மீது (Excise Duty) ரூ.1,800 கோடி வருவாயைக் கொண்டு ரூ.2 அரிசி திட்டத்திற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவேன் என்று கூறினார்.
இது, கடந்த தேர்தலின் போது புரசைவாக்கம் தொகுதியில் கருணாநிதி பேசியது. அப்போதும் மதுபான விற்பனைதான், இப்போதும் மதுபான விற்பனைதான். ஆக இலவசங்கள் அனைத்திற்குமான ஆதாரம், மதுபான உற்பத்தியில் இருந்து கிடைக்கும் தீர்வை வருவாயும், அதனால் விற்பனை கிடைக்கும் விற்பனை வரியும்தான்.
ஆக இலவசம் என்பது ஆட்சிகளின் சாதனையல்ல, அது மது அருந்துவோர் அளிக்கும் மறைமுக ‘கொடையால்’ வழங்கப்படுகிறது. எனவே, இதற்கான பெருமை ‘குடி’மக்களையே சாரும். ஆட்சியாளர்களையல்ல!
--
Thanks and Regards,
Shanmugam Ramaswamy
Wednesday, 30 March 2011
ம ம க -வின் சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி உறுதியானது!
| செய்திகள் || கட்டுரைகள் || தொகுதிகள் || வேட்பாளர்கள் || கணிப்புகள் || முடிவுகள் || தகவல் பலகை |
ம ம க -வின் சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி உறுதியானது!
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் சின்னமாக இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்குவது உறுதியாகியுள்ளது.த மு மு க என்கிற இயக்கத்தின் அரசியல் பிரிவான ம ம க எனப்படும் மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம் ஆகிய தொகுதியில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. தங்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை அவர்கள் கோரியிருந்தனர்.
ஆனால், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் மெழுகுவர்த்தி சின்னம் கேட்டிருந்தார். இதனால் மமகவுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்படுமா என்ற கேள்வியிருந்தது. இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர் தன் கோரிக்கையைத் திரும்ப பெற்றுள்ளார். எனவே 3 தொகுதிகளிலும் பொதுவான சின்னங்களாக இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ம ம க-வுக்குக் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் பொது சின்னமாக இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கேட்டு இருந்தனர். தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து அங்கீகாரம் பெறாத கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது சின்னம் பெற வேண்டுமென்றால் 10 சதவீத தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால் விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளில் மட்டும் தான் போட்டியிடுகிறது. எனவே பொது சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. தேர்தல் விதிகளின் படி அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குச் சின்னங்களை ஒதுக்கீடு செய்வார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் பொது சின்னமாக இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கேட்டு இருந்தனர். தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து அங்கீகாரம் பெறாத கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது சின்னம் பெற வேண்டுமென்றால் 10 சதவீத தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால் விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளில் மட்டும் தான் போட்டியிடுகிறது. எனவே பொது சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. தேர்தல் விதிகளின் படி அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குச் சின்னங்களை ஒதுக்கீடு செய்வார்கள்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Subscribe to:
Posts (Atom)








































