Thursday, 31 March 2011

நாட்டு வைத்தியம்! பித்தவெடிப்பு,(கால் ஆணி) சரியாக...



கால் ஆணிக்கு மருந்து என்ன என்று ஒரு சகோதரர் கேட்டிருந்தார். இதோ ஒரு நாட்டு வைத்தியம். முயற்சித்துப் பார்க்கலாமே.        நாட்டு வைத்தியம்! பித்தவெடிப்பு,(கால் ஆணி) சரியாக...

பித்தவெடிப்பு சரியாக...

பித்தவெடிப்பு வந்தா... கால் அசிங்கமா தெரியும். வலி வேறஒரு வழி பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.

பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

நகச்சுத்து விலக...

நகச்சுத்து உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டு வந்தா குணம் கிடைக்கும்.

வேப்பிலை கொஞ்சம் எடுத்துக்கோங்க, அதோட மஞ்சள்துண்டு சேர்த்து அரைச்சு நகச்சுத்து வந்த இடத்துல பூசினா... குணம் கிடைக்கும். இதை தொடர்ந்து ஒரு வாரம் செஞ்சுட்டு வந்தா உரிய பலன் கிடைக்கும்.

ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி!

காலத்துக்கு ஏத்த மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும். அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா... ஆளை உண்டு, இல்லைனு ஆக்கிடும்.

இந்த... கால் ஆணி இருக்கே, அது வந்துட்டா உயிர் போற மாதிரி வலி எடுக்கும். சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு தெரியாம பனைவெல்லத்தை கால் ஆணி உள்ள இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த வைப்பாங்க. இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம் வர்ற அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையான வைத்தியம் பாருங்க. கைவசம் எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும்போது... எதுக்காக இந்த முரட்டு வைத்தியம்?

அம்மான் பச்சரிசி செடினு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்க. அந்தச் செடியை உடைச்சு, அதுல வர்ற பாலை எடுத்து, கால் ஆணி இருக்கற இடத்துல தடவி வந்தா... அந்தப் பிரச்னை ரொம்பச் சொகமா மறஞ்சி போயிரும்.

ஒரு செடியை சிறுசு சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத் தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கெடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலி கொறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.

மருதாணி இலை கொஞ்சம், மஞ்சத் துண்டு கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மையா அரைக்கணும். ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்துல வச்சு கட்டிடணும். தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க. துண்டக் காணோம்... துணியைக் காணோம்னு பாய்ஞ்சி ஓடிப்போயிரும் ஆணி.

சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா... மூணு நாள்ல குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண் உண்டாகும். அப்படி வந்தா... ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும் காணாமப்போயிரும்.     கால் ஆணி நீங்க ...
இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

Mohammad Sultan

சிந்திக்க, செயல்பட சில நபி மொழிகள் !




                பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..

  "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"

(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)



கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்!
யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின்
பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)

சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்!
“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு
வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவனத்தில் அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!
‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று
கூறியபடி நபி (ஸல்) அவர்கள்
தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட)
சைகை செய்தார்கள். (புகாரி)

நோய் விசாரிக்கச் சென்றால் சுவனத்தில் ஒரு தோட்டம்!
ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக
ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை
அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே மாலையில் நோய்விசாரிக்கச்
சென்றால் மறுநாள் காலை வரை
ஏழாயிரம் வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு
சுவனத்தில் ஒரு தோட்டம் இருக்கும். (திர்மிதீ)

நரகம் ஹராமாக்கப்பட வேண்டுமா?
‘எவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி
கூறுவாரோ அவருக்கு
 நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

மக்களை அதிகமாக சுவனத்தில் சேர்ப்பவைகள்!
மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி
(ஸல்) அவர்களிடம்
வினவப்பட்டபோது ‘இறையச்சமும் நற்குணமும் தான்’ எனக் கூறினார்கள்’ (திர்மிதீ)

உண்மை பேசுவது சுவனத்திற்கு வழிகோலும்!
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம்
சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)

கோபத்தை அடக்கினால் சுவனத்து கண்ணழகிகளில் விரும்பியவரை மணக்கலாம்!
யார் கோபத்தை வெளிப்படுத்தும் சக்தியுள்ள நிலையில் அதை அடக்குகின்றாரோ
அவரை அல்லாஹ் மறுமையில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் மத்தியில்
அழைத்து ஹூருல் ஈன்களில் – சுவர்க்கத்து கண்ணழகிகளில் தாம் விரும்பியவரை
அனுபவித்துக்கொள்ளக்கூடிய உரிமையை வழங்குவான் (திர்மிதீ)

பெற்றோரைப் பேணுவதால் சுவனம் கிடைக்கும்!
‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது
தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர்.
அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ
வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல்  அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

இரண்டைப் பேணுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சுவர்க்கத்திற்கு
பொறுப்பேற்பார்கள்!
“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு
வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான்
சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில்!
“நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என
நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக்
காட்டினார்கள்” (புகாரி)

நான்கு விசயங்கள் ஒரே நாளில் ஒருவர் செய்தால் அவர் சுவனம் சென்று விட்டார்!
எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு
ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும்
உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம்
நுழைந்து விட்டார்.

விரும்பிய வாயிலின் வழியாக சுவனம் செல்ல!
எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக
லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன்
அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும்
அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப்
பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு
கூலியில்லை. (முஸ்லிம்)

சுன்னத்தான தொழுகைகளைப் பேணினால் சுவனத்தில் மாளிகை!
“ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ
அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.

தேர்வு -பெற்றோருக்கு அறிவுரைகள் !


பெற்றோருக்கு அறிவுரைகள்

1. தேர்வு என்றவுடனேயே மாணவர்களை பீதிக்குள்ளாக்கி அச்சுறுத்தும் நிலையைத்தான் நாடெங்கும் பார்க்கிறோம். தேர்வில் வெற்றி பெறுவதுதான் ஒரு மாணவனின் ஒட்டுமொத்த இலட்சியம் என்பதுபோன்ற ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டுள்ளது. நிச்சயமாக மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறத்தான் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆயினும் அல்லாஹ்விடம் தவக்குல், மற்றும் ஈமானிய நிலை இதன்மூலம் மறக்கடிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. பெற்றோர்களே! மறுமையில் வெற்றிபெறுவதைத்தான் ஒவ்வொரு முஸ்லிம் மாணவ மாணவியர்களின் முதல் குறிக்கோளாக போதிக்கப்படுவேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதைத்தான் முதல் இலட்சியமாக மனதில் பதிய வைக்கப்படவேண்டும். இவ்வுலக கல்விகளின் தேர்வுகள் அதை ஒப்பிடும்போது இரண்டாம் நிலையில்தான் வைக்கப்பட வேண்டும்.

2. மாணவர்கள் அரசுத் தேர்வில் வெற்றிபெற தவறிவிட்டாலோ அல்லது குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டாலோ அவர்களின் பெற்றோர்கள் கடுமையாக திட்டித் தீர்ப்பதை நாம் பார்க்கிறோம். இதனால் தோல்வியுற்ற மாணவர்கள் கடும் சோர்வடைந்து, மனமுடைந்து இறுதியில் தற்கொலைக்குச் செல்கிறார்கள். அதைவிடுத்து குறைந்த மதிப்பெண் எடுப்பதற்கு என்ன காரணம் என்று ஆராயுங்கள். அந்த குறைகளை களைய முற்படுங்கள்.

3. அன்பின் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை அவர்களின் சக நண்பர்களோடு ஒப்பிட்டு குத்திக் காட்டி பேசாதீர்கள். 'நீ என்ன மார்க்கெடுத்து கிழிச்சிருக்கிறாய், அதோ அந்த பிள்ளைய பாரு' என்ற வார்த்தைகள் உங்கள் பிள்ளைகளை தாழ்வுமனப்பான்மையை நோக்கி இட்டுச் செல்லும். இறுதியில் அந்த நண்பரை வெறுக்கும் நிலைக்கு கொண்டு சேர்க்கும். 

4. மாறாக உங்கள் பிள்ளைகளை உற்சாகப் படுத்துங்கள். அவர்களுக்கு தோழோடு தோழ்நின்று உதவுங்கள். விடியற்காலையில் எழுந்து படி என்று சொல்வதற்குப் பதிலாக நீங்கள் தஹஜ்ஜத் வேலையில் எழுந்து பிள்ளைகளையும் தொழுமாறு ஏவி அவர்களுக்காக தேநீர் போன்ற பானங்களை தயாரித்து கொடுத்துவிட்டு 'பார்த்தாயா நீ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்காகவே உன்னோடு நானும் இந்த அதிகாலையில் விழித்திருக்கிறேன்' என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் அடையும் உற்சாகம் ஒருபக்கம் இருக்கட்டும் அல்லலாஹ்வின் அளப்பெரும் அருள் உங்கள்மீது இறங்கும், இதைவிட வேறு என்ன வேண்டும்.

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை


அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை

samuthaayam
தமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13-ஐ நோக்கி அசுர வேகத்தில் பயணிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிலக்கல்ல. இதனை பார்க்கும் பொழுது  அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடுகளையும் பல்வேறு பிரச்சனைக்ளுக்கு மத்தியில் ஒருவழியாக அறிவித்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டவர்களாக  அரசியல் பிரச்சார களத்தை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் கட்சிகளும் தங்கள் பிரதிநிதித்துவத்தை வெளிக்கொணரும் விதமாக தமிழகத்தில் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதில் பேசப்படும் பெரிய கட்சிகளாக முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா (SDPI) ஆகியவை மக்களிடத்தில் தங்களை நிலை நிறுத்தி இருக்கின்றன.
இதில் முஸ்லீம் லீக் ஆளும் கட்சியான திமுகவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், மமக எதிர்கட்சியான அதிமுகவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், தேசிய அரசியல் கட்சியான SDPI இவ்விரு அணிகளையும் சாராமல் தன்னிச்சையாக எட்டு தொகுதிகளிலும் களம் காணும் என்று அக்கட்சிகளின் தலைமை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதே சூழலில் இன்னும் சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளையும் அறிவித்திருக்கின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  அரசியலில்  நாம் போட்டியிடுவதில்லை ஆனால் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் முன்னேற ஆவண செய்யும் கட்சிகளுக்கு ஆதரவு என்றும், மமக எங்கு போட்டியிடுமோ அங்கு அவர்களை தோற்கடிப்பதற்காக வேலைகளை செய்வோம் என்றும் அறிவித்திருக்கிறது.
இதே போன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அதிமுக-விற்கு தங்கள் ஆதரவு எனவும் முஸ்லிம் வேட்பாளர்கள் எங்கு போட்டியிடுவார்களோ அங்கு அவர்களூக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என அறிவித்திருக்கிறது. இதே போன்று அகில இந்திய இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தம் நிலைப்பாடு SDPI போட்டியிடும் அனைத்து இடங்களிலும் SDPI செயல்வீரர்களூடன் இணைந்து தங்கள் செயல்வீரர்களும் களப்பணி ஆற்றுவார்கள் என்று SDPI க்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலைப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இல்லாமல் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒற்றுமையோடு ஒரே கட்சியாக போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் பரவலாக பேச்சு நடைபெறுகிறது.
இனிமேல் அவ்வாறு பேசிக் கொண்டு இருப்பதில் பயனில்லை காரணம் இம்மூன்று கட்சிகளும் முடிவுகள் எடுத்துவிட்டது. இனி இதில் மாற்றங்கள் விளைய வாய்ப்புகள் இல்லை. நம் ஒற்றுமையை பற்றி இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தல் வருவதற்கு முன் பேசி சுமூக தீர்வுகாண விளைவதுதான்  புத்திசாலித்தனமாக இருக்கும்.
நமக்கு இருக்கும் சிறிய கால அளவை வீணடிப்பதை விட்டு விட்டு இந்த மூன்று கட்சிகளில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆராய்வோம்.
முஸ்லீம் லீக் – பல வருடங்களாக அரசியலில் கூட்டணி வைத்து போட்டியிட்டு வருகின்றது வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் ஏதேனும் நலத்திட்டங்களோ அல்லது சமூக மாற்றத்திற்கான முயற்சிகளோ இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றதா என்றால் அநேக மக்களின் கருத்து இல்லை என்பதாகும். நிதர்சனமும் இதுதான்.
சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் செல்லும் நம் தலைவர்கள் நம்மை பற்றி பேசுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். இதனால் மக்களுக்கு இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு காலம் அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நாம் இவர்களை தேர்ந்தெடுத்தோம் ஆனால் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இவர்களால் நமக்கு கிடப்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்னும் அளவிற்கு போய்விட்டது. இதற்கு காரணம் சமூகத்தை பற்றி சிந்திக்காமல் சீட்டில் மட்டும் குறிவைத்து அதற்காக கூலை கும்பிடு போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
எந்த அளவிற்கு என்றால் சமீப காலத்திற்கு முன்னால் தோன்றிய சிறிய அரசியல் கட்சிகள் கூட தனகென்று தனி சின்னத்தை போராடி பெற்று அதில் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ தன் பலத்தை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது என்று சொல்லும் இவர்களோ காலம் முழுவதும் ஒரே சின்னத்தில்(வேறு கட்சியின்) நின்று இரண்டு சீட்டிற்கும் மூன்று சீட்டிற்கும் காலில் விழாத குறையாக சமூகத்தின் தைரியத்தையும், பலத்தையும் சிதைத்துவிட்டனர். அதில் வெற்றி பெற்று சட்டசபை சென்றால் அங்கு குரல் கொடுக்க சொன்னால் கொரடாவில் இல்லாததை பேசக்கூடாது என்று விளக்கம் வேறு. இவ்வாறு இருக்கும் இவர்களால் இந்த முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று எண்ண தோன்றுகிறது.
ஆனால் இது ஒரு பழம் பெறும் கட்சி இது காயிதே மில்லத் சாஹிப் போன்ற சமூகத்திற்காக உழைத்த தன்னலமற்ற தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.  தமிழக அரசியலின் கடந்த கால வரலாறுகளை புரட்டினால் ஆட்சியில் யார் அமர வேண்டும் எனும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலம் பொருந்திய கட்சியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த கட்சியின் இன்றைய நிலையை சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அதன் பிறகு உருவாகியுள்ள இரண்டு கட்சிகள். இதில் யாரை தேர்ந்தெடுப்பது மனித நேய மக்கள் கட்சியா அல்லது SDPI யா இதுவே இன்று நம் முன் இருக்கும் மிகப்பெரும் கேள்வி. இதில் சற்று தொலைநோக்கு பார்வையுடனும், நடுநிலையோடும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். காரணம் இரண்டும் சமூகத்திற்காக கடினமாக உழைக்கும் கட்சிகள் இவர்கள் சட்டசபைக்கு சென்றால் நிச்சயம் நம் சமூகத்தின் நன்மைக்காக உறுதிகுலையாமல் உழைப்பார்கள். ஆனால் இதில் யாரை முதலாவதாக தேர்ந்தெடுப்பது. அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது  என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் களத்தை சந்தித்து அதில் தோல்வி அடைந்திருந்தாலும் அந்த தோல்வி அரசியல் அறிவை பெற மமக-விற்கு துணை புரிந்திருக்கிறது. அந்த அனுபவத்தோடு  இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடயிருக்கிறது.
இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை தரும் கட்சியுடன் கூட்டனி அல்லது எங்கள் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிக்கு எங்களுடைய சமூகத்தின் முழு ஆதரவு என்று ஏதேனும் கோரிக்கை (Demand) வைத்ததாக நமக்கு தெரியவில்லை. இது சீட்டு தந்தால் போதும் என்று அதிமுக-வின் பின்னால் போய்விட்டார்களே என்று எண்ண தோன்றுகிறது. இருப்பினும் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது என்று அறிவித்திருக்கிறது. அதாவது திமுக வை தோற்கடிக்க அரசியல் களம் காண இருக்கிறது மமக.
எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் சீட்டை மட்டும் எதிர்பார்த்து ஏழு மாதங்களுக்கு முன்பே அதிமுக-வுடன் கூட்டனி பேச்சுவார்த்தை தொடங்கியது நம் சமூகத்தில் இவர்களுக்கு இருந்த நற்பெயரை சீர்குலைக்கும் விதமாக அமைந்துவிட்டது.
அதனோடு சேர்த்து விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது அதை கட்டுபடுத்த வேண்டும் என்ற ஓரிரு கோரிக்கைகளை முன்வைத்தது சமூகம் அதிகாரத்தை அடைவதற்கு போதாது, பொருந்தாது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகள் சற்று மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றே குறிப்பிடமுடியும்.
இது போன்ற அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது இவர்களுடைய தலைவர்கள் நம் சமூகத்தில் உள்ள மக்களிடம் கலந்துரையாடாமல் தன் சுய கருத்தை சமூக கருத்தாக அறிவித்தார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆனால் இப்பொழுது இவர்கள் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் வாசகங்கள் நம்மை தடுமாற வைக்கிறது. காரணம் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரங்களில் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் அங்கம் பெற, கிடைத்த இட ஒதுக்கீட்டை முழுமைப் படுத்த, இது போன்ற சமுதாய கோரிக்கைகளை சட்டம் இயற்றும் அவைகளுக்குள் சொந்த அடையாளத்தோடு எடுத்துவைக்க நமக்கு அதிகாரம் தேவை அதற்காக நாம் பலவழிகளை கையாளுவோம் அதில் ஒன்றுதான் இந்த கூட்டணி. சீட்டு பெறுவதற்கு முன்னால் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருந்த இவர்கள். சீட்டை பெற்ற பிறகு அதீத கவனமும், அதிகார வர்க்கத்தில் நாம் அமர்வதற்காக இவர்கள் நடத்திய நாடகமாக இருக்குமோ என்றும் கூறத் தோன்றுகிறது. இதை தான் அரசியல் வித்தை என்பார்களோ என்று கூறுமளவிற்கு சிந்தனையில் ஆழ்த்துகிறது.  அந்த அதிகாரம் பெற  என்ற இவர்களது தேர்தல் பிரச்சாரங்களை பார்க்கும் போது புலி பதுங்கியது பாய்வதற்கு தான் என்று எண்ணம் எழாமலில்லை. ஆனால் சீட்டை பெறுவதற்கு முன்னமே மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாதது தவறு என்பது மட்டும் உண்மை. அதை நிவர்த்தி செய்யும் விதமாக தான்  இப்பொழுதாவது சமுதாய தலைவர்களை சந்தித்து கொண்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்.
SDPI -இது ஒரு தேசிய அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது. இக்கட்சி தேசிய அளவில் தேர்தல் களம் கண்டு ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் தமிழக அரசியலை பொறுத்தவரை புதிய அரசியல் கட்சிதான். இவர்கள் திருச்சி வார்டு எலக்சனில் சமீபத்தில் போட்டியிட்டார்கள் அது ஒன்றும் மிகப்பெறும் அரசியல் அனுபவத்தை கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் வைக்கும் கோரிக்கைகளும், இவர்கள் விடும் அறிக்கைகளும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை மிஞ்சும் அளவிற்கு இருப்பது விந்தையானதே.
தேர்தல் களத்தை சந்திப்பதற்கு முன்னால் இவர்கள் தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளுக்கு வைத்த கோரிக்கை நாங்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் சதவிகித அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு இந்த சட்டசபை தேர்தலில் வழங்கப்பட  வேண்டும் அதாவது தமிழகத்தின் 234 தொகுதிகளில் 23-24 தொகுதிகளை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கபட  வேண்டும்  அவ்வாறு அளிக்கும் கட்சிக்கு  ஆதரவாகவும், அக்கட்சியின் வெற்றிக்காகவும் SDPI போராடும் என்ற அறிவிப்பு செய்தார்கள்.
இது சமூக மக்களிடத்திலும் சரி அரசியல் வட்டாரங்களிலும் சரி புதுவிதமான யாரும் யோசித்திராத விதத்தில் அதே நேரத்தில் தனது கட்சியை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அறிவித்த அறிக்கையாகவே தெரிந்தது. காரணம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் இந்த அளவு தைரியமாக அரசியல் கட்சிகளுக்கு Demand வைத்தது யாரும் இல்லை என்பதால். அதை தொடர்ந்து வக்பு சொத்துகளை முறைபடுத்துவது, சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிகளை விடுதலை செய்ய ஆவண செய்வது, பாபர் மசூதி இடிப்பு, மீனவர்கள் பிரச்சனை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுவருதல் என அடுக்கடுக்காக இவர்கள் வைத்த கோரிக்கைகள், இவர்கள் அரசியலில் ஆபத்தானவர்கள் என்று அரசியல்வாதிகளை மிரள வைத்தது.
அத்தோடு தங்களது ஒவ்வொரு கூட்டங்களிலும் ஒடுக்கபட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைப்பது இவர்களது கூடுதல் பலம்.
அதன் தொடர்சியாக இவர்களிடத்திலும் சீட்டு பேறம் நடைபெற்றதாக தகவல். ஆனால் அதை உதறி தள்ளிவிட்டு தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது இவர்களது தன்னிம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் காட்டுகிறது. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் இது தனி மனித மூளையால் சிந்த்திக்க முடியாது இந்த கட்சிக்கு பின்னனியாக பலமிக்க போராட்ட குணம் கொண்ட தன்னையும் தன் கட்சியையும் பற்றி கவலை கொள்ளாத, சமூகத்தின் வலிமையை தன் வலிமையாக கொண்டு சிந்திக்கும் நல்ல தலைமை இருக்குமோ என்று பாமரனையும் யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த போரட்ட குணம் இறுதிவரையில் இருந்தால் நல்லது.
கட்சிகளின் நிலைமைகள் இவ்வாறிருக்க போட்டியிடும் தொகுதிகளின்  அடிப்படையில் இம்மூன்று கட்சிகளும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை எற்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும், இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் அரசியல் களத்தில் சந்திக்கின்றன. இவர்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். இந்த இடம் அல்லாமல் SDPI போட்டியிடும் போட்டியிடும் கடையநல்லூர், பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்),  பூம்புகார்(நாகை மாவட்டம்), தொண்டமுத்தூர்(கோவை மாவட்டம்), திருப்பூர் தெற்கு, நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்) ஆகிய நான்கு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் அனைவரும்  SDPI-யை ஆதரிக்க வேண்டும். அதே போன்று மமக போட்டியிடும்  சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி), ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் நாம் அனைவரும் மமக-வை ஆதரிக்க வேண்டும். முஸ்லீம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லீம் லீக்கை ஆதரிக்க வேண்டும். இதில் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கூட கருத்து வேறுபாடு இருக்காது என்று கூட கூற முடியும்.
இதில் குழப்பம் மிகுந்த இராமநாதபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை, அவர்களது கோரிக்கைகள், சமுதாயத்திற்கு பாடுபடும் மனநிலை, அரசியல் கட்சிகளிடம் இவர்கள் செய்த Demand ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இதனை அந்த தொகுதிகளை சேர்ந்த மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதில் குழப்பம் நிறைந்த தொகுதிகளில் அக்கட்சிகளின் கடின உழைப்பு தீர்மானிக்கும் அது போக மீதமுள்ள தொகுதிகளை நாம் குறிப்பிட்டபடி  தேர்தல் களம் கண்டால் இன்ஷா அல்லஹ் நம்மிடமிருந்து 4+2+2 = 8 சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆதலால் ஒற்றுமையில்லை என்ற மனநிலையை அகற்றிவிட்டு முன்னால் இருந்ததைவிட இயக்கங்களின் வருகையினாலும், கட்சிகளின் தோற்றங்களாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பலன்கள் தானே தவிர இழப்புகள் இல்லை என்பதே நிதர்சனம். இந்த அடிப்படையில் நாம் பயனித்தால் நிச்சயம் அடுத்த தேர்தலில் நாம் நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் அரசியல் களம் காண்பது சாத்தியமாகும். சிந்திப்போம்…….
புதுவலசை பைசல்

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!


அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!


வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
அதென்ன அல்சர்?
நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.
அல்சர் ஏன் வருது?
முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது....
சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.
ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.
அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!
மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.
எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு  ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.
அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்...
நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.
நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது! -முகம்மது சுல்தான்
நன்றி: உங்களுக்காக 

__._,_.___

Tharjuma Friday Post :::... - Sahih Al Buhari - (25-Mar-2011)






VISIT | JOIN

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?


எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?


உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.
உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு:
உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு:
மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.
புளிப்பு:
உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
காரம்:
பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.
கசப்பு:
பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:
அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.
எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.
உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.
நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.
‘உண்பது நாழி’ என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.
நன்றி:உங்களுக்காக
Mohammad Sultan